Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: முதல் நாளிலே RCB வீரர் புவனேஸ்வர் குமாருக்கு மகத்தான சாதனைக்கு வாய்ப்பு.. 2 விக்கெட் தேவை

பெங்களூரு: ஐபிஎல் 2026 சீசனில் தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணிக்காக வேகப்பந்துவீச்சை புவனேஷ்வர் குமார் வழிநடத்தவுள்ளார். இந்திய அணியில் தற்போது இடம்பெறாத நிலையில் இருந்தாலும், ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் விளிம்பில் அவர் உள்ளார். 190 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள புவனேஷ்வர், இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில், 36 வயதான புவனேஷ்வர் குமாருக்கு இந்த வரலாற்றுச் சாதனையைப் படைக்க வாய்ப்பு கிடைக்கும். தனது அனுபவமிக்க வேகப்பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் புவனேஷ்வர், தனது பெயரை ஐபிஎல் வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்க கடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதுவரை மூன்று அணிகளுக்காக ஐபிஎல்லில் விளையாடியுள்ள புவனேஷ்வர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தவிர்த்து, புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்காகவும் மூன்று சீசன்களில் களமிறங்கியுள்ளார். 2011ஆம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணிக்காக ஐபிஎல் அறிமுகமான அவர், அந்த அணிக்காக 31 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமாருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ ஆகியோர் உள்ளனர். புவனேஷ்வர் கடைசியாக 2022ஆம் ஆண்டு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ந்து பயணிக்கும் பும்ரா, 145 போட்டிகளில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரமான பிராவோ தனது ஐபிஎல் வாழ்க்கையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்காக 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளுடன் முடித்தார். இந்த 200 விக்கெட் மைல்கல், புவனேஷ்வருக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மத்தியில் ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுத்தரும்.

இதுவரை ஐபிஎல்லில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மட்டுமே ஆவார். இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் சாஹல், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்காக மொத்தம் 174 போட்டிகளில் 221 விக்கெட்டுகளை வீழ்த்தி தன் பெயரைப் பதிய வைத்துள்ளார்.

உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை ஆப்கானிஸ்தான் ரஷித் கானுக்கு உண்டு. ஐபிஎல் 2026 குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஷித், இதுவரை பல்வேறு 18 அணிகளுக்காக விளையாடிய 519 போட்டிகளில், 702 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனையை தனதாக்கியுள்ளார்.

Story first published: Saturday, March 28, 2026, 7:15 [IST]
Other articles published on Mar 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+