IPL 2026: காரை பதம் பார்த்த சிக்சர்.. GT பவுலர்களை பொளந்த கேமரான் கிரீன்.. விமர்சனத்துக்கு பதிலடி
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் வீரர் கேமரான் கிரீன் பட்டையை கிளப்பினார். கடந்த மினி ஏலத்தில் 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் கிரீன் ஏலம் எடுக்கப்பட்டார். இதன் மூலம் அதிக விலைக்கு சென்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஆனால் பெற்ற ஊதியத்திற்கு ஏற்ப கேமரான் கிரீனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலிக்க முடியவில்லை.
இதனால், பல விமர்சனங்களை சந்தித்த நிலையில், தற்போது கிரீன் பட்டையை கிளப்பியுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சீசனில் கிரீன் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் குறிப்பாக, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சம்பவம் அரங்கேறியது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் அசோக் ஷர்மா வீசிய பந்தை, கிரீன் லெக் சைடில் சிக்ஸராக விளாசினார். இந்த பந்து நேராக மைதானத்தில் தொடர் நாயகனுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த காரைத் தாக்கி சேதப்படுத்தியது. இதில் கார் சேதமடைந்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரஹானே, முதல் ஓவரிலேயே முகமது சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட்டானார். அன்க்ரிஷ் ரகுவன்ஷி, ரபாடா பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார். ரபாடா சீஃபர்ட்டையும் (19 ரன்கள்) பிலிப்ஸ் கையில் சிக்க வைக்க, கொல்கத்தா 32/3 என சரிந்தது.
இந்த இக்கட்டான நிலையில், ரோவ்மன் பவல் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவல் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அசோக் ஷர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின், அனுகுல் ராய் களமிறங்கி ஆஸ்திரேலிய வீரர் கிரீனுக்குத் துணையாக இருந்தார். இருவரும் இணைந்து 60 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி, கொல்கத்தா அணிக்காக தனது முதல் ஐபிஎல் அரை சதத்தைப் பதிவு செய்தார். 34 பந்துகளில் அரைசதத்தை கடந்த நிலையில், மொத்தமாக 55 பந்துகளை எதிர்கொண்டு 79 ரன்கள் சேர்த்து ரஷித் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். தனது இன்னிங்சில் கிரீன் மொத்தம் 4 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாசினார்.


Click it and Unblock the Notifications