IPL 2026: ரூ.25.2 கோடி வொர்த் பரமா.. கில்லை சூப்பர் மேன் போல் அவுட்டாக்கிய கிரீன்.. தப்பித்த கோலி ரெக்கார்ட்
ஐபிஎல் தொடரின் பரபரப்பான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், குஜராத் கேப்டன் ஷுப்மன் கில்லை வெளியேற்ற, சீசனின் தலைசிறந்த கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தினார். நரேந்திர மோடி மைதானத்தில் சதம் அடிக்க 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் விராட் கோலியின் ஒரு மைதானத்தில் அதிக டி20 சதங்கள் (நான்கு) என்ற நீண்டகால சாதனை தப்பித்தது.
போட்டியின் 17வது ஓவரின் கடைசிப் பந்தில் இந்த கேட்ச் அரங்கேறியது. வைபவ் அரோரா வீசிய ஷார்ட் அண்ட் ஒயிட் பந்தை, ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக அவுட்ஃபீல்டு நோக்கி அடித்தார். பந்து தரையில் விழுவதற்கு முன், டீப் பேக்வர்ட் பாயிண்டில் நின்றிருந்த கிரீன், மின்னல் வேகத்தில் பாய்ந்து, தன் கைகளை முழுவதுமாக நீட்டி, பறந்து அற்புதமாகப் பிடித்தார்.

குஜராத்தின் வெற்றிக்கு வித்திட்ட கில்லின் அதிரடி ஆட்டத்தில் அவர் 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் விளாசனார். நரேந்திர மோடி மைதானத்தில் அவர் அடித்திருக்கக்கூடிய ஐந்தாவது டி20 சதம், மயிரிழையில் தவறியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
கில் இந்த சதம் அடித்திருந்தால், எம். சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி அடித்த நான்கு சத சாதனையை முறியடித்திருப்பார். மேலும், ஒரு மைதானத்தில் ஐந்து டி20 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கும். இத்தகைய சாதனையை, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிர்ப்பூர் மைதானத்தில் கிறிஸ் கெயில் மட்டுமே படைத்துள்ளார்.
கில் ஆட்டமிழந்தபோது, குஜராத் டைட்டன்ஸ் அணி 158/4 என்ற நிலையில் இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட, கேகேஆர்-க்கு ஒரு சிறிய நம்பிக்கையே துளிர்விட்டது. ஆனால், க்ளென் ஃபிலிப்ஸ், ராகுல் தெவாட்டியா, மற்றும் ஷாருக்கான் ஆகியோர் சிரமமின்றி குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
கேமரூன் கிரீன் பேட்டிங்,பில்டிங் என தனது மதிப்பை நிரூபித்தார். முதல் இன்னிங்ஸிலும் தனது பேட்டிங்கில் ஜொலித்தார். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போதும், அவர் 55 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அசத்தினார். எனினும் இந்தப் போட்டியில அவர் பந்துவீசவில்லை.


Click it and Unblock the Notifications