Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சியர்லீடர் அழகிகளுக்கு ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

மும்பை: ஐபிஎல் 2026 சீசன் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், மைதானத்தில் வீரர்களின் அதிரடி ஆட்டமும், கேப்டன்களின் வியூகங்களும் ஒருபுறம் இருக்க, மைதானத்திற்கு உற்சாகம் சேர்க்கும் "கிரிக்கெட்-டெயின்மென்ட்" மாதிரியின் முக்கிய அங்கமாக சியர்லீடர்கள் திகழ்கின்றனர்.

வீரர்களுக்குக் கோடிக்கணக்கான ஒப்பந்தங்கள் கிடைக்கும் நிலையில், சியர்லீடர்களுக்கு ஒரு போட்டிக்கு எவ்வளவு ஊதியம் தரப்படுகிறது. அவர்களுடைய பயணம் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். சியர்லீடர்களுக்கு நிலையான "ஐபிஎல் சம்பளம்" என்று எதுவும் இல்லை.

சியர்லீடர்களுக்கான ஊதியமானது ஒவ்வொரு ஃபிரான்சைஸ் அணியாலும் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கப்படுகிறது. கடந்த காலத் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிக ஊதியம் வழங்கும் அணியாகத் திகழ்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சியர்லீடர்களுக்கு ஒரு போட்டிக்கு சுமார் ₹24,000 முதல் ₹25,000 வரை ஊதியம் வழங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) போன்ற பெரிய அணிகள் இதற்கு அடுத்த நிலையில், ஒரு போட்டிக்கு சுமார் ₹20,000 வரை அளிக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இந்தத் தொகை தோராயமாக ₹17,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மற்றும் டெல்லி கேபிடல்ஸ் போன்ற பிற ஃபிரான்சைஸ் அணிகள் ஒரு போட்டிக்கு ₹12,000 முதல் ₹15,000 வரையிலான அடிப்படை கட்டணத்தை பொதுவாக வழங்குகின்றன.

அடிப்படை கட்டணத்தைத் தவிர, அணிகள் ஊக்கத்தொகைகளையும் வழங்குகின்றன. அணி வெற்றி பெற்றால், ஒரு போட்டிக்கு கூடுதலாக ₹3,000 'வெற்றி போனஸ்' கிடைப்பது வழக்கம். மேலும், கார்ப்பரேட் நிகழ்வுகள், விளம்பரப் பதிவுகள் போன்ற வெளிப்பணிகளுக்கு ஒரு செஷனுக்கு ₹5,000 முதல் ₹12,000 வரை கட்டணம் பெற்று, அவர்களின் வருவாய் அதிகரிக்கிறது.

ஒரு முழு சீசனில் (பிளேஆப்கள் உட்பட), ஒரு சியர்லீடர் ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஃபிரான்சைஸ் அணிகள் ஆடம்பர ஹோட்டல் தங்குமிடம், விமானக் கட்டணம், தினசரி உணவுப் படி, மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதால், இவர்களுக்கான ஊதியம் பெரும்பாலும் சேமிப்பாகவே இருக்கும்.

'கவர்ச்சியான' தோற்றம் இருந்தாலும், சியர்லீடர்களின் தேர்வு செயல்முறை கடுமையானது. பெரும்பாலான கலைஞர்கள் ரஷ்யா, உக்ரைன், பிரேசில், அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளில் இருந்து வருகிறார்கள். எனினும், சமீப ஆண்டுகளில், பாங்க்ரா மற்றும் லாவணி போன்ற உள்ளூர் நடன வடிவங்களை உள்ளடக்கிய இந்தியக் குழுக்களின் பங்கேற்பு 30% அதிகரித்துள்ளது.

வணிக ரீதியாக, சியர்லீடிங் குழுவை நியமிப்பது வெறும் சாதாரண விசயம் அல்ல. இது ஒரு முக்கியமான முதலீடாகும். ஒரு சீசனுக்கு ஃபிரான்சைஸ் அணிகளுக்கு ₹2 கோடி முதல் ₹3 கோடி வரை செலவாகும் இந்த முதலீடு, ET எட்ஜ் இன்சைட்ஸ் கணக்கின்படி, டிக்கெட் விற்பனையில் 5-7% அதிகரிப்பையும், வணிகப் பொருட்கள் ஈடுபாட்டையும் கணிசமாக உயர்த்துகிறது.

சியர்லீடர்கள் தங்கள் உடைகள் மற்றும் நடன அசைவுகளில் ஸ்பான்சர் பிராண்டிங் கொண்ட ஆடையை அணிவதன் மூலம் அமு ஒரு விளம்பரமாகும் மாறுகிறது. இதன்மூலம், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபிஎல் வணிக இயந்திரத்தில் சியர்லீடர்கள் ஒரு மிக முக்கிய பங்களிப்பைச் செய்கிறார்கள். ஒரு காலத்தில் சீயர்லீடர்களுக்கு வீரர்கள், ரசிகர்கள் பாலியல் சில்மிஷத்தை தருவதாக புகார் எழுந்தது. மேலும் சீயர்லீடர்கள் அபாசமாக உடை அணிந்து ஆடுவதாக புகார் எழுந்ததை அடுத்து, ஆடைகள் விசயத்தில் தற்போது பிசிசிஐ சிறப்பு கவனம் செலுத்துகிறது.

Story first published: Friday, March 27, 2026, 12:54 [IST]
Other articles published on Mar 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+