IPL 2026: சிஎஸ்கே அணிக்குள் வரும் ஹர்திக் பாண்டியா? மேலும் 3 அணிகள் வாங்க தீவிரம்
மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமாக அமைந்தது. விளையாடிய 14 போட்டிகளில் ஆறு வெற்றி எட்டு தோல்வி என 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தையே பிடித்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி, பத்து தோல்வி என எட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்திருந்தது.
இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது கேப்டனான ஹர்திக் பாண்டியாவை விடுவிக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தருணத்தில் ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே அணி வாங்க ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் தட்டுப்பாடு இருக்கின்றது. குறிப்பாக சிவம் துபே அணியில் இருந்தாலும் அவர் பெரும் அளவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய சிவம் துபே மொத்தமாக 270 ரன்கள் அடித்து இருந்தாலும்,ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
அவர் ஏதேனும் ஒரு, சில போட்டியில் மட்டுமே ரன்கள் சேர்த்து வருகிறார். பெரும்பான்மையான போட்டிகளில் அவர் தடுமாறியே வந்தார். இதைப் போன்று பந்துவீச்சில் நான்கு இன்னிங்ஸ்களுக்கு மட்டுமே பந்து வீசினார். 30 பந்துகளை வீசி 64 ரன்கள் விட்டுக் கொடுத்து, வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார்.
இதனால் சிவம் துபேவை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை கொண்டு வரலாம் என சிஎஸ்கே நிர்வாகம் யோசித்து வருகிறது. தோனியுடன் ஹர்திக் பாண்டியா நெருங்கிய நட்பு கொண்டிருப்பதால் அவரை அணிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
எனினும் ஹர்திக் பாண்டியா வந்தால் கேப்டன்சி கண்டிப்பாக கிடையாது என்ற செய்தியும் அவருக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கக்கூடிய ஆல்ரவுண்டர்கள் பெருமளவு இல்லை. அவர்களும் ஹர்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
இதேபோன்று லக்னோ அணியின் கேப்டன் பண்ட் மோசமாக விளையாடி வருகிறார். இதனால், பேட்டிங்கில் நடு வரிசையில் ஒரு நல்ல ஆல்ரவுண்டரும் கேப்டன் செய்யக்கூடிய வீரரும் தேவை என்பதால் ஹர்திக் பாண்டியாவை லக்னோ வாங்க ஆர்வம் காட்டும். இதேபோன்று கொல்கத்தா அணி தங்களுடைய கேப்டனான ரஹானேவை மாற்ற நடவடிக்கை எடுக்கும்.
அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வரலாம். 2026 ஆம் ஆண்டு சீசனில் ஹர்திக் பாண்டியா பத்துப் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 206 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 138 என்ற அளவில் சராசரி 22 என்று அளவிலும் இருந்தது. பந்துவீச்சில் ஒன்பது இன்னிங்ஸ்களில் பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.மொத்தமாக 136 பந்துகளை வீசி 259 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

