Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே அணியிலிருந்து சிவம் துபேவை நீக்க முடிவு? ரூ.14.2 கோடி வீரரை சேர்க்க திட்டம்

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் மிக முக்கியமான ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

இந்த சூழலில் இரண்டு அணிகளுமே தற்போது புள்ளி பட்டியலில் பின்தங்கி இருப்பதால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடும் நெருக்கடியை சந்திக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. அணியில் சஞ்சு சாம்சனை தவிர மற்ற எந்த வீரரும் பேட்டிங்கில் ரன்கள் சேர்ப்பதில்லை.

குறிப்பாக சிஎஸ்கே அணி பெரிதும் நம்பி இருந்த சிவம் துபே நடப்பு தொடரில் தடுமாறி வருகிறார். இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி வெறும் 150 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 30 ஆகும். சிவம் துபேவின் பலமே சிக்ஸர்கள் அடிப்பது தான். ஆனால் நடப்பு சீசனில் சிவம் துபே வெறும் ஆறு சிக்சர் மட்டும்தான் அடித்திருக்கிறார்.

இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. சிவம் துபே நடு ஓவர்களில் களமிறங்கி சிக்சர் அடிக்கும் போது அது அணியின் ரன் அடிக்கும் வேகத்தை அதிகரிக்கும். இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும். ஆனால் சிவம் துபே தொடர்ந்து தடுமாறி வருவதால் அவரை நீக்கிவிட்டு 14 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்ட பிரசாந்த் வீரை சேர்க்கலாமா என்ற யோசனையில் சிஎஸ்கே உள்ளது.

பிரசாந்த் வீர் சுழற் பந்து வீச்சையும் மேற்கொள்வார் என்பதால் அவரை ஒரு ஆல்ரவுண்டராக பயன்படுத்த சிஎஸ்கே திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் வீரும் பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் சிவம் துபேவை நீக்கிவிட்டு அவருக்கு முக்கிய பொறுப்பை வழங்க அணி நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

எனினும் சிவம் துபேவுக்கு மும்பைக்கு எதிராக கடைசி ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதில் அவர் தவறவிட்டால் சிவம் துபே பதில் பிரசாந்த் வீர் தான் இனி சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனனில் இடம்பெறுவாள் என எதிர்பார்க்கலாம். இதேபோன்று கடந்த போட்டியில் உர்வில் பட்டேல் சொற்ப ரன்களில் ஆட்டம் இருந்தாலும், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்து இருக்கிறது.

Story first published: Saturday, May 2, 2026, 6:30 [IST]
Other articles published on May 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+