Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: RRக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்.. சஞ்சு சாம்சன் அறிமுகம்

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கௌஹாத்திகள் நடைபெறுகிறது. மழை காரணமாக ஆட்டம் ஐந்து நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது.

மழை மேகங்கள் சூழ்ந்து இருப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், முதலில் நாங்கள் பந்து வீச விரும்புகிறோம். இங்கு அதிக அளவு மழை பெய்து இருக்கிறது இதனால் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும். இதனால் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம். முழு நேர கேப்டனாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றேன்.

அணி நிர்வாகம் எனக்கு பெரிய அளவு ஆதரவு அளிக்கிறார்கள். இந்த சீசன் எங்களுக்கு நல்ல ஒரு சீசனாக அமையும் என நம்புகிறேன்ம் இம்முறை கோப்பையை வெல்வது எங்களுடைய குறிக்கோளாக இருக்கும். எங்கள் அணியில் பல திறமை வாய்ந்த அறிவு கூர்மையான வீரர்கள் இருக்கிறார்கள் என்று ரியான் பராக் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், முதலில் நாங்களும் பந்து வீச தான் இருந்தோம். ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும். கடந்த ஆண்டு எவ்வாறு எங்களுக்கு சென்றது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே பல யுக்திகளை அமைத்து ஏலத்தில் நல்ல திறமை வாய்ந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கின்றோம்.

இந்த சீசனில் எங்கள் புதிய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். எங்கள் அணியில் வெளிநாட்டு வீரர்கள் ஷார்ட், ஜிம்மி ஓவர்டன், நூர் அஹமத் மற்றும் மாட் ஹென்றி ஆகிய நான்கு வீரர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார் சிஎஸ்கே அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சன் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

Story first published: Monday, March 30, 2026, 19:24 [IST]
Other articles published on Mar 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+