IPL 2026: சிஎஸ்கே- வின் சொக்கத்தங்கம் யா ஓவர்டன்.. அபார பந்துவீச்சால் தடுமாறிய சன்ரைசர்ஸ்
ஐதராபாத்: 2026 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில், , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் வலுவான இலக்கை நிர்ணயித்தது. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், அபிஷேக் ஷர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகியோரின் அதிரடி அரைசதங்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தின.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா ஒரு அதிரடி தொடக்கத்தை வழங்கினார். அவர் வெறும் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்திசெய்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். பவர் ப்ளேயில் ஹைதராபாத் 70 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், செம ஃபார்மில் இருந்த ட்ராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் இஷான் கிஷன் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் முகேஷ் சவுத்ரி அவுட்டாக்கி சிஎஸ்கே-வுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அபாயகரமான அபிஷேக் ஷர்மாவை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடிக்க ஜேமி ஓவர்டன் வெளியேற்றினார். இதன்மூலம் ஹைதராபாத் அணிக்கு தொடக்க சறுக்கல் ஏற்பட்டது.
அடுத்துவந்த அனிகேட் வர்மா (2 ரன்கள்), நிதீஷ் குமார் ரெட்டி (12 ரன்கள்) ஆகியோரையும் ஜேமி ஓவர்டன் அடுத்தடுத்து வீழ்த்தி தனது மூன்று விக்கெட் சாதனையை நிறைவு செய்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், ஹென்ரிச் கிளாசன் நிலைத்து நின்று தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். அவர் 59 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
கிளாசன் (59 ரன்கள்) அதன்பின் அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சலீல் அரோரா 13 ரன்களில் குர்ஜப்நீத் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். ஷிவாங் குமார் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரின் விக்கெட்டுகளை அன்ஷுல் கம்போஜ் வீழ்த்தி தனது மூன்று விக்கெட் வீழ்த்தி, பதிவிட்டு, சன்ரைசர்ஸ் அணியை 194 ரன்களில் கட்டுப்படுத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜேமி ஓவர்டன் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். முகேஷ் சவுத்ரி 2 விக்கெட்டுகளையும், குர்ஜப்நீத் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, ஹைதராபாத் ரன்வேட்டையைத் திறம்படக் கட்டுப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications