Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே அணி மோசமான பேட்டிங்.. சாம்சன் சாதனைக்கு பிறகு நடந்த பிரளயம்.. GT அபாரம்

சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் அணிக்கு திரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்பிளேவில் மோசமாக விளையாடியது. நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது எட்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பரபரப்பான இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யும் முக்கிய முடிவை எடுத்தார்.

குஜராத் அணிக்கு முந்தைய போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த பிரசித் கிருஷ்ணா, இன்றைய ஆடும் லெவன் அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக, அர்ஷத் கான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.

அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. சர்பராஸ் கான் மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் இம்பாக்ட் சப் (impact sub) வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த நிலையில், உர்வில் படேல் மற்றும் அகீல் ஹுசைன் ஆகியோர் இன்றைய ஆரம்ப பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

போட்டியின் ஆரம்பத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், முகமது சிராஜின் பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்டார். மறுமுனையிலிருந்து, வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா பந்துவீச, சஞ்சு சாம்சன் தனது தனித்துவமான பாணியில் பவுண்டரி அடித்து, ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களைக் கடந்தார்.

ருதுராஜ் கெய்க்வாட், முகமது சிராஜின் அடுத்த ஓவரை எதிர்கொண்டு, சிறப்பான பாணியில் ஒரு பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். 3 ஓவர்கள் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. இந்த ஓவரில் 10 ரன்கள் வந்தன. ருதுராஜ் கெய்க்வாட் (6 பந்துகளில் 10 ரன்கள்), சஞ்சு சாம்சன் (12 பந்துகளில் 11 ரன்கள்) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

ரபாடா வீசிய வேகமான பந்தில் சஞ்சு சாம்சன் சிக்கினார். சுமார் 148.2 கி.மீ வேகத்தில், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே எழும்பிய பந்தை, சாம்சன் அடிக்க முயற்சிக்க, விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் அது கேட்ச் ஆனது. சஞ்சு சாம்சன் 11 ரன்களுடன் வெளியேற, சென்னை 21 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

சஞ்சு சாம்சனின் வீழ்ச்சி டைட்டன்ஸ் அணிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்தது. மூன்றாவது வீரராக உர்வில் படேல் களமிறங்கினார். ரபாடா மீண்டும் தனது வேகத்தால் உர்வில் படேலை சிக்க வைத்தார். பிட்சில் மேல் எழும்பி வந்த பந்தை உர்வில் படேல் புல் ஷாட் ஆட முயற்சிக்கையில், மிட்-ஆன் திசையில் இருந்து வேகமாக ஓடி வந்த ஜேசன் ஹோல்டர் லாவகமாக கேட்ச் பிடித்தார். ரபாடா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையை பெரும் சிக்கலில் ஆழ்த்தினார். சென்னை 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 4 ஓவர்களிலேயே தங்கள் இம்பாக்ட் சப் வீரரான சர்பராஸ் கானை களமிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் சர்பராஸ் கான் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முகமது சிராஜ் பந்துவீசிய ஒரு துல்லியமான பவுன்சர் பந்தை சர்பராஸ் கான் அடிக்க முயற்சிக்க, அது விக்கெட்டின் பின்னால் கேட்ச் ஆனது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெறும் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. பவர்பிளே ஓவர்கள் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

Story first published: Sunday, April 26, 2026, 16:22 [IST]
Other articles published on Apr 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+