IPL 2026: சிஎஸ்கே பிளே ஆப்க்கு கண்டிப்பாக சென்று இருக்கும்.. தோல்விக்கு முக்கிய காரணமே இதுதான்
மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி விளையாடிய 14 போட்டிகளில் ஆறு வெற்றி, எட்டு தோல்வி என 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் நீடிக்கிறது.

இந்த சூழலில் சிஎஸ்கே அணி தோல்விக்கு முக்கிய காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணி ஆரம்பத்தில் சரியாக விளையாடவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் பின்பு தொடர்ந்து நல்ல ஆட்டத்தை சிஎஸ்கே வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தது.
இதனால் சிஎஸ்கே அணி இம்முறை கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய கட்டத்தில் முக்கிய வீரர்கள் காயம் அடைந்து வெளியேறியது தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவிய பின் அடுத்த ஆட்டத்தில் இருந்து தங்களுடைய பழைய திறமையை வெளிப்படுத்தியது.
தொடர் வெற்றிகளை குவித்து வந்த நிலையில் முக்கிய கட்டத்தில் வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினர். குறிப்பாக இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து சிஎஸ்கே அணி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிசை நம்பி இருந்தது. ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் வெளியேறிவிட்டார்.
இதேபோன்று சிஎஸ்கே அணியின் அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி காயம் காரணமாக இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து பேச்சாளராக விளங்கி வந்த கலீல் அஹமதும் காயம் காரணமாக பாதியிலே வெளியேறிவிட்டார்.
இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கலீல் அஹமத் யாக்கர்களை சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது. அதேபோன்று சிஎஸ்கே அணியில் ஆரம்ப கட்டத்தில் அதிரடி காட்டி பேட்டிங்கை நிலை நிறுத்திய ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக வெளியேறினார்.
இவ்வளவு நடந்த பிறகும் சிஎஸ்கே அணியில் உர்வில் பட்டேல், ஜிமி ஓவர்டன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அபாரமாக விளையாடி சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடி தந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முயற்சித்தனர். குறிப்பாக ஜெமி ஓவர்டன் பந்துவீச்சு சிஎஸ்கே அணியின் முதுகு எலும்பாக இருந்தார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே பந்துவீச்சை பலவீனப்படுத்தியது.
இதனால் கடைசியாக விளையாடிய ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த கடைசி மூன்று ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி ஒன்று அல்லது இரண்டில் வெற்றி பெற்றிருந்தால் கூட பிளே ஆப் சுற்றுக்கு சென்றிருக்க முடியும். ஆனால் வீரர்கள் தொடர்ந்து காயத்தால் வெளியேறியது தான் இந்த தொடரில் மிகப்பெரிய பிரச்சினையாக சிஎஸ்கேவுக்கு மாறியது.


Click it and Unblock the Notifications

