Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: சேட்டனை அவுட்டாக்கிய தமிழ்நாட்டு மருமகன்.. முதல் பந்தில் சிக்சர், 2வது பந்தில் மேஜிக்

சென்னை: சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் 'Roar'26 ரசிகர் திருவிழாவில், எம்.எஸ். தோனி முன்னிலையில் சஞ்சு சாம்சன், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மோதிய போட்டி கவனம் ஈர்த்தது. இத்துடன், சுரேஷ் ரெய்னா, மத்தேயு ஹேடன் ஆகியோர் சிஎஸ்கேயின் முதல் 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸுடன் 11 வருட காலம் பயணித்த சஞ்சு சாம்சன், இந்த 19வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளார். இதற்கு முன் ஐந்து போட்டிகளில் மூன்று அரை சதங்கள் உட்பட 321 ரன்கள் குவித்து 'தொடரின் சிறந்த வீரர்' விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த உற்சாகமான நிகழ்வில், மத்தேயு ஹேடன், ட்வெய்ன் பிராவோ மற்றும் முத்தையா முரளிதரன் போன்ற சிஎஸ்கே ஜாம்பவான்கள் பங்கேற்றனர். முரளிதரன் பந்துவீச, சாம்சன் அதை எதிர்கொண்டார். முதல் பந்தை சாம்சன் சிக்சர் அடித்தாலும், 2வது பந்தை முரளிதரன் வேகமாக வீசி சாம்சனை ஏமாற்றினார். பெரிய ஷாட்டுக்காக வெளியேறி வந்த சாம்சன் பந்தை தவறவிட, எம்.எஸ். தோனி அவரை லாவகமாக ஸ்டம்பிங் செய்தார்.

முரளிதரன் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும், சாம்சனை அவர் ஆட்டமிழக்க வைத்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. டி20 உலககோப்பை 2026 தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற சாம்சனை, முரளிதரன் வீழ்த்தி இருக்கிறார். அதுவும் தோனி கையில் ஸ்டம்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக, இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மத்தேயு ஹேடன் ஆகியோர் சிஎஸ்கேயின் முதல் 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் இணைக்கப்பட்டனர். 2008 முதல் 2021 வரை சிஎஸ்கேயின் முக்கிய அங்கமாக ரெய்னா இருந்தார். அவர் அணி வென்ற 2010, 2011, 2018, 2021 ஆகிய நான்கு ஐபிஎல் கோப்பைகளிலும் பங்களிப்பு செய்துள்ளார்.

Story first published: Monday, March 23, 2026, 16:04 [IST]
Other articles published on Mar 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+