IPL 2026: சிஎஸ்கே வெற்றிக்கு காரணமான 2 பேர்.. சேப்பாக்கம் வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்த பிளமிங்
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்து வீச்சில் கலக்கி வருவது ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணிக்கு கோட்டையாக இருந்தது.
இதற்கு காரணம் சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சு படை தான் பேட்டிங்கில் தாங்கள் நிர்ணயித்த ஸ்கோரை தங்களது பந்துவீச்சு மூலம் சென்னை மைதானத்தில் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு பலம் பொருந்தி அணியாக இருந்தது.

ஆனால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இதேபோன்று நடப்பு சீசனிலும் சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப்புக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பலமான சுழற் பந்துவீச்சு தற்போது கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் க்ளிக் ஆகி இருக்கிறது.
சிஎஸ்கே அணியில் புதிய வீரராக இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகீல் உசேன் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது ஆகியோர் 8 ஓவர்களில் மொத்தமாகவே 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை இருவரும் இணைந்து வீழ்த்தி இருக்கிறார்கள்.
இதில் நூர் அஹமது, கடந்த சில போட்டிகளாக தடுமாறிய நிலையில் தற்போது நான்கு ஓவர்களில் 21 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் உசேன் இம்பேக்ட் வீரராக களமிறங்கி நான்கு ஓவரில் 26 ரன்களை விட்டுக் கொடுத்து அங்குரிஸ் ரகுவன்சியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு படு மோசமாக இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆட்டங்களாக தற்போது நெருகேறி வருவது சிஎஸ்கே ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. குறிப்பாக ஸ்பின்னர்கள் இருவரும் அபாரமாக பந்துவீசி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
சீசனின் ஆரம்ப கட்டத்தில் சிஎஸ்கே அணி ஃபார்முலாவை கண்டுபிடித்து விட்டதால் இனி சொந்த மண்ணில் இதே பார்முலாவை பயன்படுத்தி வெற்றியைப் பெற வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்று வெளி மைதானங்களில் சிஎஸ்கே அணி வேறு ஃபார்முலாவை பயன்படுத்தி விக்கெட்டை கைப்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications