IPL 2026: சிஎஸ்கே அணியில் களமிறங்கிய அதிரடி வீரர்.. குஜராத் அணியில் முக்கிய பவுலர் இல்லை
ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி இன்று பலபரீட்சை நடத்துகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதிய நேரத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டனும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான கில், இன்று வெப்பம் மிகவும் கடுமையாக இருக்காது என்று நான் நம்புகிறேன். நாங்கள் கடந்த சில நாட்களாக நல்ல விஷயங்களை சரியாக செய்திருக்கின்றோம்.

ஆட்டத்தின் நடுப்பகுதியில் நாங்கள் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுக்கின்றோம். எங்கள் பௌலர்கள் சரியான லெந்தில் பந்து வீச வேண்டும். ஆடுகளம் நன்றாக இருந்தால் பவர் பிளேவில் குறைந்தபட்சம் 70 முதல் 80 ரன்கள் அடிக்க வேண்டும். நாங்கள் சேப்பாக்கத்தில் என்ன ஆடுகளம், கள சூழல் இருக்கிறது என்பதை பொறுத்து விளையாடுவோம்.
எங்கள் அணியில் அர்ஷத் அணிக்கு திரும்பிருக்கிறார் என்று கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கின்றது. எனவே முதலில் பேட்டிங் செய்து அதனை பிறகு தற்காத்துக் கொள்வது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை.
எங்கள் அணி வீரர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்து இருக்கின்றது. மீண்டும் இந்த ஆட்டத்தில் நாங்கள் ஜீரோவில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் முன்னேறி வருகின்றோம் என்று நினைக்கின்றேன். ஒரு விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். நான் நல்ல தொடக்கத்தை பெற்று வருகின்றேன்.
ஆனால் பெரிய ஸ்கோர் அடிக்க முயற்சி செய்கின்றேன். எங்கள் அணியில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது உர்வில் பட்டேல் அணிக்குள் திரும்பி இருக்கிறார் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார். குஜராத் அணியில் மிகவும் முக்கியமான பவுலராக கருதப்படும் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.


Click it and Unblock the Notifications