Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இது கேட்ச்சே கிடையாது.. ரஜத்துக்கு நடந்தது அநியாயம்.. நடுவருடன் விராட் கோலி வாக்குவாதம்

அகமதாபாத்: ஐபிஎல் 2026 சீசனில், ஆர்சிபி, குஜராத் மோதிய ஆட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அகமதாபாத் மைதானத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜேசன் ஹோல்டர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதாரை சர்ச்சைக்குரிய ஒரு கேட்ச் மூலம் வெளியேற்றினார்.

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி, ரபாடாவின் பந்துவீச்சை சூளுக்கு எடுத்தார். சிஎஸ்கேக்கு எதிரான ஆதிக்கம் செலுத்திய ரபாடா, கோலிக்கு எதிராக பொட்டி பாம்பு போல் அடங்கினார்.

கோலி 28 ரன்களிலும், பெத்தேல் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ரஜத் பட்டிதார் மற்றும் படிக்கல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் இருவரும் அதிரடி காட்ட ஆட்டத்தின் 8வது ஓவரில் பெரும் சர்ச்சை சம்பவம் ஒன்று வெடித்தது.

அந்த ஓவரில் அர்ஷத் கான் வீசிய 4வது ஓவரில், படிதார் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது, அடித்த பந்தை பவுண்டரி ரைலனில் ஹோல்டர் டைவ் அடித்து பந்தை பிடித்தார். அப்போது ஹோல்டர் பந்தை கீழே தரையில் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நடுவர் அவுட் வழங்கிவிட்டார். ஆனால் இதை பார்த்த ஆர்சிபி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக, விராட் கோலி மைதானத்திற்கு வெளியே இருந்த நான்காவது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்தை ஹோல்டர் தரையில் வைத்துவிட்டதாகவும், இதற்கு எப்ப அவுட் வழங்கினீர்கள் என்றும் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது போட்டியில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 155 ரன்களில் அந்த அணி சுருண்டது. 4 பந்துகள் எஞ்சிய நிலையில், ஆர்சிபி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ரஜத் பட்டிதாரின் அவுட், ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஜேசன் ல்டரின் கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, April 30, 2026, 21:28 [IST]
Other articles published on Apr 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+