Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: தோனி இல்லை.. இந்த சிஎஸ்கே ஜாம்பவான் சொன்ன அறிவுரையை பின்பற்றினேன்.. அகில் ஹூசைன் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது மிகப்பெரிய வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தனது அசத்தலான சதத்தால் அணிக்கு வலுசேர்க்க, அகீல் ஹுசைன் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டினார்.

சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 101*(ஆட்டமிழக்காமல்) ரன்கள் குவித்து தனது ஐந்தாவது ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். சாம்சனின் இந்த இரண்டாவது CSK சதத்தால், சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது. தனது துணைக் கேப்டன் பொறுப்பையும் திறம்பட வெளிப்படுத்தினார்.

மும்பை பந்துவீச்சில், ஏ.எம். கசன்ஃபர், அஷ்வினி குமார் தலா இரு விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 1/31 என்ற சிக்கனமான பந்துவீசினார்கள். பின்னர் 208 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னையின் சிறப்பான பந்துவீச்சுக்கு இரையாகி வெறும் 104 ரன்களுக்குச் சுருண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹுசைன், 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் (எக்கனாமி 4.25). இந்தச் சிறப்பான ஆட்டத்திற்குப் பின், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ட்வைன் பிராவோ பவர்பிளே பந்துவீச்சு குறித்து தனக்கு அளித்த ஆலோசனையை ஹுசைன் நினைவு கூர்ந்தார்.

இது குறித்துப் பேசிய ஹுசைன், “ட்வைன் பிராவோ சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. பவர்பிளேயில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் அடி வாங்குவார்கள். எனவே, அடி வாங்கும் பயத்தை மனதில் இருந்து நீக்கிவிட்டு, உங்கள் உத்திகள், பேட்ஸ்மேனின் பலம் மற்றும் பலவீனங்கள், அத்துடன் உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை உணர்ந்து, எதைச் செய்யப் போகிறீர்கள் என்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று பிராவோவின் அறிவுரையை விளக்கினார்.

அகீல் ஹுசைனுக்கு உறுதுணையாக நூர் அகமத் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நூர் அகமதின் பங்களிப்பைப் பாராட்டிய ஹுசைன், “நூர் அகமத் சிறப்பாகச் செயல்படுவதைக் காண்பது மகிழ்ச்சி. அவர் கடினமாக உழைத்தார். சில போட்டிகள் அவருக்குச் சாதகமாக இல்லை, ஆனால் இன்று இரவு அவர் வெற்றிபெற்றதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

சென்னை பந்துவீச்சு ஆக்ரோஷமாகத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே அகீல் ஹுசைன் டேனிஷ் மாலேவாரை டக் அவுட் செய்தார். முகேஷ் சௌத்ரி, குவின்டன் டி காக்கை (10 பந்தில் 7 ரன்) வெளியேற்றினார். ஹுசைன் நமன் தீர்ரையும் (0) அவுட்டாக்க, மும்பை 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றனர். ஆனால், ஹோசைன் தனது மூன்றாவது விக்கெட்டாக திலக் வர்மாவை (37 ரன், 29 பந்து) வீழ்த்தினார்.பின்னர், கேப்டன் ஹர்திக் பாண்டியாவை (1 ரன், 2 பந்து) அகமத் வெளியேற்றினார். அடுத்த பந்திலேயே ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (கோல்டன் டக்) நூர் அகமத் பந்துவீச்சில் வீழ்ந்து மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார்.

சூர்யகுமார் யாதவையும் (36 ரன், 30 பந்து) வெளியேற்றி, அகீல் ஹுசைன் நான்கு விக்கெட்டுகளை நிறைவு செய்தார். ஹுசைனின் பந்துவீச்சால், மும்பை அணி ரன் ரேட்டை எட்ட முடியாமல் பின்தங்கி, வெற்றி வாய்ப்பை இழந்தது.

இறுதிக்கட்டத்தில், ஜேமி ஓவர்டன் கிருஷ் பகத்தையும், அன்ஷுல் காம்போஜ் ஷர்துல் தாகூரையும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்த்தினர். குர்ஜப்னீத் சிங், பும்ராவை வெளியேற்ற, மும்பை 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியுற்றது.

Story first published: Friday, April 24, 2026, 0:27 [IST]
Other articles published on Apr 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+