மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கு மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. வீரர்களை தக்க வைக்கப்படும் கெடு முடிவதற்கு முன்பு சிஎஸ்கே அணி சில வீரர்களை மாற்ற முயற்சி செய்து வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சாம்சனை வாங்கி அதற்கு பதில் ஜடேஜாவை வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தருணத்தில் ஜடேஜா அணியை விட்டு சென்றார் அவருக்கு மாற்று வீரத் தேவை என்பதால் சிஎஸ்கே அணி ஒரு அதிரடி முடிவை எடுத்தது.

அதன்படி குஜராத் அணிக்காக விளையாடும் வாஷிங்டன் சுந்தரை தங்கள் அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே அணி காயை நகர்த்தி வருகிறது. இதற்காக வாஷிங்டன் சுந்தரை தங்களிடம் தாருங்கள் அதற்கான பணத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம் என சிஎஸ்கே கேட்டிருக்கிறது.
இல்லை வாஷிங்டன் சுந்தருக்கு பதில் வேறு ஏதேனும் வீரர் வேண்டுமென்றால் ரச்சின் ரவீந்திரன் அல்லது ஷாம் கரணை தருகிறோம் என்றும் சிஎஸ்கே கூறி இருக்கிறது. வாஷிங்டன் சுந்தரை கடந்த ஐபிஎல் சீசனில் வெறும் மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு தான் குஜராத் அணி வாங்கியது. ஆனால் கடந்த 2025 சீசனில் வெறும் ஆறு போட்டிகளில் தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் மொத்தமாக அவர் 133 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். இதனால் குஜராத்துக்கு வாஷிங்டன் சுந்தரின் பெரிய அளவு முக்கியத்துவம் கொடுக்க முடியாததால் சிஎஸ்கே அணி அவரை கேட்டிருக்கிறது. இதற்கான பணத்தையும் வழங்க அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.
எனினும் கடந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு வாஷிங்டன் சுந்தர் டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடி இருக்கிறார். நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் கூட வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் பந்து வீச்சிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இதனால் வாஷிங்டன் சுந்தரை இன்னும் அதிகமாக பயன்படுத்த குஜராத் அணி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.
இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் இந்த கோரிக்கையை குஜராத் அணி நிராகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து சிஎஸ்கே அணி காய்களை நகர்த்தி வரும் நிலையில் அது கைகூடாமல் போய் வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் நவம்பர் 15ஆம் தேதி அல்லது 16ஆம் தேதிக்குள் எந்த வீரர்களை தக்க வைக்கின்றோம் என்பது குறித்து ஒவ்வொரு அணியும் சமர்ப்பிக்க வேண்டும் என செய்திகள் வெளியாகி உள்ளது.