IPL 2026: சிஎஸ்கே- க்கு மேலும் ஒரு இடி.. ஆயுஷ் மாத்ரே காயம்.. தொடரில் பங்கேற்பது சந்தேகம்
ஐதராபாத்: ஐபிஎல் 2026 போட்டியில், சிஎஸ்கே அணியின் இளம் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக அவதிப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் வீரர் ஹென்ரிக் கிளாசெனின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இடதுபுறம் பாய்ந்து பந்தைப் பிடித்த கிளாசென், 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த மாத்ரேவை வீழ்த்தினார். அப்போது சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில், ஆயுஷ் நான்-ஸ்ட்ரைக்கர் நோக்கி ஓடும் போது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். பின்னர், நிதீஷ் குமார் ரெட்டி வீசிய பந்தை அவர் அடித்தார். பந்தில் சரியான டைமிங் இல்லாவிட்டாலும், இடதுபுறமாக காற்றில் பாய்ந்து, வீழ்ந்தபடியே பந்தைப் பிடித்த கிளாசெனின் கேட்ச் அனைவரையும் கவர்ந்தது.

முதலில் பேட்டிங் செய்த இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்து அதிரடி துவக்கத்தை அளித்தார். ஹென்ரிக் கிளாசென் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி அசத்தினார்.
சென்னை அணியின் பந்துவீச்சில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகேஷ் சௌத்ரி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பதிலுக்கு களமிறங்கிய ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஆயுஷ் மாத்ரே விக்கெட்டுக்கு பிறகு, தடுமாறியது. 11.4 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களுடன் தடுமாறியது. மேத்யூ ஷார்ட் மற்றும் சிவம் தூபே ஆகியோர் களத்தில் இருந்தனர். சிவாங் குமார் வீசிய பந்தில், பிரவீஸ் நான்கு பந்துகள் சந்தித்து ரன் எடுக்காமல் வெளியேறினார்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 19 ரன்கள் மற்றும் சர்பராஸ் கான் 19 பந்துகளில் 25 ரன்கள் ஆகியோர் நல்ல துவக்கத்தைப் பெற்றும், அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களில் நிதீஷ் ரெட்டி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடுத்ததாக, ஏப்ரல் 23 அன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications