Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே பேட்டர்ஸ் கொஞ்சமாவது ரன் அடிங்கப்பா.. கிளைமேக்ஸ் வேற வருது.. புலம்பும் ரசிகர்கள்

ஐபிஎல் 2026 சீசன் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த முறை நெருக்கடி அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேற முடியாமல் திணறிய சிஎஸ்கே, நடப்பு தொடரில் இதுவரை எட்டு போட்டிகளில் மூன்று வெற்றிகள், ஐந்து தோல்விகள் என ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

வரும் மே 2 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெறுவது சிஎஸ்கே அணிக்கு மிக அவசியம். புள்ளிப்பட்டியலில் முன்னேற இந்த வெற்றி ஒரு திருப்புமுனையாக அமையும். மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தோல்விகளைச் சந்தித்தாலும், அவர்களின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக உள்ளது. சஞ்சு சாம்சன் ரன் குவித்தால் மட்டுமே அணி வெற்றி பெறுகிறது என்ற எண்ணம் உருவாகியுள்ளது. சஞ்சு சாம்சன் ஒவ்வொரு போட்டியிலும் அணியைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்ப்பது தவறு. இதனால், கேப்டன் ருதுராஜ், சிவம் துபே, பிரவீஸ் போன்ற முக்கிய வீரர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்ய வேண்டுமென அணியின் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இந்தத் தொடரில் பிரவீஸ் மற்றும் சிவம் துபே ஆகியோர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதேபோல், சர்பராஸ் கான் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பதாகவும், அவர் தொடர்ந்து ரன்களைச் சேர்த்தால் மட்டுமே அவரது கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் எழுச்சி பெறும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கேப்டன் தோனி அணிக்கு வந்தாலும் எந்த ஒரு அதிசயமும் நடக்காது என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்; அவரை மட்டும் நம்பி காலத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் சரிந்ததால், சர்பராஸ் கான் இம்பாக்ட் வீரராகக் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் முகேஷ் சவுத்ரிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இத்தகைய சூழலைத் தவிர்க்க சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் போதிய ரன்களைக் குவிப்பது அவசியம். அப்போதுதான் முகேஷ் சவுத்ரி அல்லது அகில் ஹூசைன் போன்ற வீரர்கள் இம்பாக்ட் பிளேயர்களாகக் களமிறங்க முடியும் என்றும், அது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Thursday, April 30, 2026, 16:48 [IST]
Other articles published on Apr 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+