IPL 2026: கொஞ்சம் உதவி கிடைத்திருந்தால் வென்று இருக்கலாம்.. கோபத்தில் ஹெல்மட்டை எறிந்த சிஎஸ்கே வீரர் ஓவர்டன்
பெங்களூரு: ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான 251 ரன்கள் இலக்கை துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்ட்டன் விக்கெட்டை இழந்த விரக்தியில் ஹெல்மெட்டை தரையில் அடித்து ஆவேசத்தை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
சவாலான இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு சரஃபராஸ் கான் குருணால் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழக்க, பிரஷாந்த் வீர் 43 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் வெளியேறினர். ஓவர்ட்டன் 37 ரன்கள் உடன் பிரஷாந்த் அமைத்த 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் முறிந்தது. 17வது ஓவரில் சுயாஷ் சர்மா பந்தில் ஜேக்கப் பெத்தெலிடம் கேட்ச் ஆகி ஓவர்ட்டன் வெளியேற, அணியின் தோல்வியும் உறுதியானது.

தனது விக்கெட் அணியின் தோல்வியை உறுதிப்படுத்தியதால், பவுண்டரி கோட்டை கடந்ததும் ஓவர்ட்டன் ஹெல்மெட்டை தரையில் அடித்து உடைத்தார். சென்னை அணி 207 ரன்களுக்கு சுருண்டு, பெங்களூருவிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் மற்றும் ஆயுஷ் மாத்ரே கொஞ்சம் நிலைத்து நின்று விளையாடி இருந்தால், சிஎஸ்கே வெற்றி பெற்று இருக்கும். ஜெய்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஓவர்டன் போராடிய நிலையில், அவர் ஆட்டமிழந்த உடன் விரக்தியில் ஹெல்மட்டை தூக்கி எறிந்தார்.
முன்னதாக, முதலில் பேட் செய்த பெங்களூருவில் தேவதூத் படிக்கல் தனது இரண்டாவது ஐபிஎல் அரைச் சதத்தை விளாசினார். ஓவர்ட்டனின் பந்துவீச்சில் கிளீன்போல்ட் ஆவதற்கு முன், 11 முதல் 15 ஓவர்களுக்குள் பெங்களூரு 62 ரன்களை குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது.
படிக்கல் வெளியேறிய பிறகு, ரஜத் படிதார் மற்றும் டேவிட் ஜோடி கைகோர்த்தது. இந்த இணை நான்காவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் வெறும் 36 பந்துகளில் 99 ரன்கள் விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தது. சின்னாஸ்வாமி மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பந்துகளை பறக்கவிட, பெங்களூரு 251 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.


Click it and Unblock the Notifications