IPL 2026: சிஎஸ்கே செய்த மகா முட்டாள்தனம்.. விக்கெட் எடுத்த பவுலரை நீக்கியது ஏன்? ரசிகர்கள் கோபம்
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த ஒரு முட்டாள்தனம் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சிஎஸ்கே அணியில் இந்தத் தொடர் ஆரம்பத்தில் இருந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே குறைந்தது பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும் பந்துவீச்சில் சிஎஸ்கே பவுலர் அகேல் ஹூசைனும் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர்.
அகேல் உசேன் வந்த பிறகு சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மேம்பட்டது. நான்கு போட்டிகளில் அவர் மொத்தமாக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக அவருடைய எக்னாமி 7.98 என்ற அளவிலே இருந்தது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அவர் 17 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

அப்படி இருந்த ஒரு வீரரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போது ஏன் நீக்கப்பட்டார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது அவருக்கு பதிலாக 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்ட பிரசாந்த் வீரை சிஎஸ்கே அணி சேர்த்து உள்ளது.
முதலில் சிவம் துபே நீக்கிவிட்டு பிரசாந்த் வீரை சேர்க்கலாம் என்று தான் பேசப்பட்டது. ஆனால் திடீரென்று அகில் ஹூசைன் ஏன் நீக்கப்பட்டார் என்று குழப்பம் நிலவுகிறது. அது மட்டுமில்லாமல் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி எதிராக சிஎஸ்கே அணி வெறும் மூன்று வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாடுகிறது.
இதன் மூலம் பேட்டிங்கில் சிஎஸ்கே அணி யாரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்யும் என்ற குழப்பமும் இருக்கின்றது. சிஎஸ்கே அணி இவ்வாறு வீரர்களை தேவையில்லாமல் மாற்றுவதும் நன்றாக விளையாடும் வீரருக்கு வாய்ப்பு வழங்காமல் இழுத்தடிப்பதும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அகில் ஹூசைன் முழு உடல் தகுதியுடன் இருந்தும், அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்று ரசிகர்கள் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். சிஎஸ்கே வின் இந்த முட்டாள்தனத்தால் தான் அணி தோல்விகளை கல்வி வருவதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications