Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: நாங்க விளையாடும் போது ஆடுகளம் சரியில்லை.. தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை தழுவியது டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

இந்த இலக்கை குஜராத் அணி 16.4 ஓவர்களில் எட்டி எட்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி ஆறாவது இடத்திற்கு சரிய, குஜராத் அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

இது குறித்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சில சமயம் எனக்கு ஆடுகள நிலை குறித்து ஆராயவே கடுப்பாக இருக்கின்றது.ஆனால் முதலில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது, ஆடுகளம் கடும் சவால்களை அளித்தது. மிதமான வேகப்பந்து வீச்சை பவுலர்கள் வீசும் போது, ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக இருந்தது.

ஆடுகளத்தின் பவுன்சும் மாறி,மாறி இருந்தது. இதன் காரணமாக பவர் பிளேவில் நாங்கள் ஷாட் ஆட கடுமையாக சிரமப்பட்டோம். அதிக விக்கெட்டுகளை ஆரம்பத்திலே இழந்து விட்டோம். இது போன்ற ஆடுகளத்தை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு ஆடுகளும் எவ்வாறு செயல்படும் என்று கணிக்கவே முடியாமல் போய்விட்டது.

இந்த போட்டியில் எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் நாங்கள் விளையாட முயற்சி செய்யும்போது மிகவும் தாமதமாக மாறிவிட்டது. டைம் அவுட் வந்தபோது பிளமிங் இடம் நான் இதை தான் சொன்னேன். நான் அதிரடி காட்ட முயற்சி செய்கின்றேன். ஆனால் ஆடுகளம் மிகவும் கடினமாக இருக்கின்றது.

திடீரென்று பந்து பவுன்ஸ் ஆகிறது. திடீரென்று பவுன்சே இல்லை நான் முயற்சி செய்கின்றேன். ஆனால் என்னால் முடியவில்லை என்று இதுபோல் ஒரு நாள் மோசமாக எப்போதும் விளையாட்டு துறையில் அமையும் பில்டிங்கிலும் நாங்கள் மிகவும் அலட்சியமாக செயல்பட்டோம். நான் முதலில் அதிரடி காட்ட முயற்சி செய்தேன்.

அதன் பிறகு விக்கெட்டுகள் விழுந்தவுடன் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சி செய்தேன். என்னுடைய நேரத்தை களத்தில் அதிக நேரம் செலவிட்டு அதன் பிறகு அதிக சிங்கிள்ஸ் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி, எந்த நாளாக இருந்தாலும் சரி நான் எப்போதுமே சிங்கிள்ஸ் அதிக அளவு எடுப்பதில் முயற்சி செய்வேன். அதிரடி காட்ட முடிவெடுத்து, பந்து பேட்டில் நன்றாக பட்டால், நான் தொடர்ந்து அதிரடி காட்டுவேன். இன்றைய ஆட்டத்தில் முகேஷ் சவுத்ரி பந்து வீச வந்திருக்க வேண்டும் ஆனால் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்ததால் சர்பராஸ்கான் பேட்டிங் செய்ய இம்பேக்ட் வீரராக வந்துவிட்டார் என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 26, 2026, 19:59 [IST]
Other articles published on Apr 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+