Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: தேவைப்படும் போது ரன் குவிப்பேன்.. பெரிய இன்னிங்ஸ் விரைவில் வரும்..சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் தற்போது கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருக்கிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய பணித்தது. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்த நிலையில், கொல்கத்தா அணி 160 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி, கேப்டன் ருதுராஜ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனென்றால் நாங்கள் ஒரு நல்ல இலக்கை தற்காத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஆடுகளத்திற்கு இது நார்மலான ஸ்கோர் தான். ஆனால் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியது.

முதல் ஏழு எட்டு ஓவர் வரை பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது. அதன் பிறகு பந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. முதலில் நாங்கள் 200 முதல் 210 ரன்கள் வரை அடிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஆடுகளம் மாறியவுடன் 180 ரன்களே நல்ல இலக்காக இருக்கும் என்று நினைத்தோம். பந்துவீச்சும் மகிழ்ச்சியை தருகிறது.

தற்போது மெதுவாக அனைத்தும் ஒருங்கிணைந்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் தங்களது பணி என்ன என்பது நன்றாக தெரிந்து கொண்டு வருகிறார்கள். எந்த லங்தில் பந்து வீச வேண்டும். பந்துவீச்சில் எந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரிந்து கொண்டோம். நாங்கள் பிரசாந்த் வீரை பயன்படுத்த நினைத்தோம். ஒருவேளை பேட்டிங்கில் தேவைப்பட்டால் அவரை களம் இறக்கலாம் என்றுதான் நினைத்தோம்.

இதேபோன்று அக்கில் ஹொசைன் இன்று சிறப்பாக செயல்பட்டார். நூர் அகமதின் பந்துவீச்சும் பிரமாதமாக இருந்தது. ஆனால் நாங்கள் கேட்சுகளை கோட்டை விட்டு இருக்கின்றோம்.ஒன்று அல்லது இரண்டு கேட்ச்களை மட்டுமே பிடிக்கும். மற்ற கேட்ச் அனைத்தையும் கோட்டை விட்டோம். கடும் வெப்பம் நிலவியதால் வீரர்கள் அனைவருக்கும் வியற்றுக் கொட்டியது.

இதனால் கை ஈரமாக இருந்தது. ஆனால் இதை ஒரு காரணமாக சொல்ல நான் விரும்பவில்லை. அனைத்திலும் நாங்கள் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றோம். எங்கள் அணியில் போதுமான எனர்ஜி இருக்கின்றது. வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பு இருக்கின்றது.ஒவ்வொரு பந்தையும் நாங்கள் சிறப்பாக செயல்படுகின்றோம். நாங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்.

தொடர்ந்து வெற்றிகளை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு நடந்து நீண்ட காலமாக ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன். அணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. எனினும் என்னுடைய தனிப்பட்ட பார்ம் எனக்கு எந்த ஒரு கவலையும் தரவில்லை. ஏனென்றால் மனதளவிலும், உடலளவிலும் நான் புத்துணர்ச்சியுடன் இருக்கின்றேன். கண்டிப்பாக என்னிடமிருந்து பெரிய எண்ணிக்கை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம். தேவைப்படும்போது நிச்சயமாக நான் ரன் குவிப்பேன் என ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 15, 2026, 0:22 [IST]
Other articles published on Apr 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+