IPL 2026: சிஎஸ்கே அணிக்காகவும், ரசிகர்களுக்காகவும் அனைத்தும் கொடுப்போம்.. கேப்டன் ருதுராஜ் உருக்கம்
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இரு அணிகளும் கடைசியாக மோதிய எட்டு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த போட்டியில் 48 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இது குறித்து பேசிய அவர், இந்த போட்டியில் நாங்கள் நல்ல முறையில் ஆரம்பித்தோம். அதனால் கிடைத்த உத்வேகத்தை தொடர்ந்து முன்னேறி கொண்டு சென்றோம்.

பவர் பிளே பிறகு நாங்கள் போட்டியை கொஞ்சம் எங்கள் பக்கம் இழுத்தோம். இந்த ஆடுகளத்தில் ஒரு 20 -30 ரன்கள் குறைவாக தான் சேசிங் செய்யப் போகிறோம் என்பது எங்களுக்கு நல்ல விஷயமாக தெரிந்தது. நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றுக்கொண்டு, எதிலும் ஒரு வீரர் கடைசிவரை நின்று விளையாட திட்டமிட்டோம்.
அன்சூல் கம்போஜ் பந்துவீச்சு சிறப்பாக செயல்படுகிறார். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு ஒரு பேட்ஸ்மேன் போல் யோசித்து பந்து வீசுகிறார். இதைப் போன்று நூர் அகமத் எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் விக்கெட்டை பெற்று தருகிறார். அவர் தனது பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்தார். அது தற்போது நன்கு கை கொடுக்கின்றது.
எங்கள் அணியில் பேலன்ஸை சரி செய்வதற்காக தான் நாங்கள் பிரசாந்த் வீரை எட்டாவது வீரராக சேர்த்தோம். இதன் மூலம் கூடுதலாக எங்களுக்கு ஒரு பலரும் கிடைப்பார்கள். அகில் ஹூசைன் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
நான் இந்த தொடர் முழுவதுமே நம்பிக்கையுடன் தான் இருந்தேன். ஆனால் டி20 கிரிக்கெட்டில் நாம் அடிக்கும் சிலர் நல்ல ஷாட்கள் கூட ஃபில்டரிடம் கேட்ச் ஆக மாறிவிடும். ஆனால் எனது மனைவி, எனது அணி உறுப்பினர்கள் அனைவரும் என்னை நன்கு பார்த்துக் கொண்டார்கள். நான் நல்ல முறையில் இருக்கிறேன் என்பதை அவர்கள் உறுதி செய்தார்கள். இந்த இன்னிங்ஸ் கார்த்திக், இருக்கு நல்ல நம்பிக்கையை கொடுக்கும்.
இதேபோன்று உrவில் பட்டேல் ஒரு 6 அடிக்கும் பேட்ஸ்மேன். ஆனால் கண்டபடி பேட்டை சுற்ற மாட்டார். எந்த பந்தை அடிக்க வேண்டும். எந்த பந்தை விட வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். இதேபோன்று கார்த்திக் சர்மா சுழற் பந்துவீச்சாளர்களை நல்ல முறையில் எதிர்கொள்கிறார். அவர் தனது இன்னிங்ஸை நன்கு ஆரம்பித்தால், தொடர்ந்து அதிரடி காட்டுவார்.
வீரர்கள் அனைவரும் திட்டங்களை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறுகள் நிச்சயம் நடக்கும். ஆனால் ரசிகர்களுக்காகவும், இந்த சென்னை ஜெர்சிக்காகவும் நாம் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications