Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆடுகளத்தில் பிரச்சினை.. நல்ல பிட்ச்சா இருந்தால், எவ்வளவு ஸ்கோர் அடிச்சிருப்போம் தெரியுமா? ருதுராஜ்

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் படுதோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ராஜஸ்தான் அணி அதனை 12 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் எட்டி வெற்றியை ருசித்தது.

இந்த சூழலில் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், எரிச்சல் எல்லாம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் விளையாடிய போது ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. அதுவும் ஜோப்ரா ஆர்ச்சர், பர்கர் போன்ற பவுலர்களை எதிர்கொள்வது கடினமாக இருந்தது.

அவர்கள் சரியான லென்த்தில் பந்து வீசி எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்கள். அவர்களுக்கு பிறகு சுழற் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தில் இருந்து நல்ல பயனைப் பெற்றார்கள். நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்று இருக்க வேண்டும்.

ஆனால் எங்கள் அணியில் சில வீரர்கள் தங்கள் திறனை இன்று வெளிகாட்டினார்கள். ஆனால் 150 அல்லது 160 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் எது நல்ல இலக்கு என்பதை தெரியவில்லை. எனவே தொடர்ந்து அதிரடி காட்டி ரன்களை சேர்ப்பது மட்டும்தான் வெற்றி பெற காரணமாக இருக்கும். ஆடுகளம் ஏதேனும் ஒரு நாள் இது போல் கடினமாக இருக்கும்.

எனவே இந்த தோல்வி எங்களுக்கு எரிச்சலை தரவில்லை. இந்த தோல்வியை அப்படியே நகர்த்தி வைத்துவிட்டு, இங்கு இருந்து நகர வேண்டும். இன்னும் மூன்று நாட்களில் அடுத்த போட்டி இருக்கின்றது. அதில் அனைவரும் நன்றாக விளையாட என்ன தேவையோ அது செய்ய வேண்டும். மனரீதியாக நாங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எங்கள் அணியில் பல இனம் வீரர்கள் இருக்கின்றார்கள். ஒருவேளை பெரிய தொடரில் விளையாடும் போது ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றம் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் போது அவர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆரம்பத்தில் தவறு செய்வது என்பது நல்ல விஷயம்.

ஏனென்றால் அதன் பிறகு நாம் தவறில் இருந்து பாடம் கற்று முன்னேறி கொள்ள முடியும். எனக்கு முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடுவது என்ற கோட்பாடு மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இம்பேக்ட் பிளேயர் என்ற விதி வந்த பிறகு எது நல்ல இலக்கு என்பதை தெரியாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் 20 ஓவர் வரை போட்டி செல்வதே கிடையாது.

அதுவும் 150 -160 ரன்கள் தற்காத்துக் கொள்ளும் போதெல்லாம் போட்டி முன்பே முடிவடைந்து விடுகிறது. எனவே பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை நம்பி விளையாட வேண்டும். இந்த பந்தை அடிப்பதற்கு ஏதுவாக பவுலர்கள் வீசினார்கள் என்றால் நீங்கள் உங்களது சாட்டை ஆடி ரன் சேர்க்க வேண்டும் என்று அப்படி எங்களுக்கு நடக்கவில்லை.

எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண விரும்புகின்றோம். நல்ல மனநிலையில் பாசிட்டிவாக இருந்து பேட்டிங் செய்ய வேண்டும். ஆடுகளம் மட்டும் நன்றாக இருந்திருந்தால், இதே பேட்டிங் வரிசை எவ்வளவு நல்ல ஸ்கோரை அடித்திருக்கும் என்று கண்டிப்பாக யாருக்கும் தெரியாது என்று ருதுராஜ் கூறியுள்ளார்.

Story first published: Monday, March 30, 2026, 23:29 [IST]
Other articles published on Mar 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+