Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கோட்டைக்குள் புகுந்து சிஎஸ்கே சம்பவம்.. சாம்சன், கார்த்திக் அதிரடியில் டெல்லி தோல்வி

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோட்டைக்குள் புகுந்து அந்த அணியை துவம்சம் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் 2026 தொடரின் 48-வது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி, பிளே ஆப் ரேசில் சிஎஸ்கே மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணிக்கு, சஞ்சு சாம்சன் மற்றும் இளம் வீரர் கார்த்திக் சர்மா ஜோடி கொடுத்த மரண அடி டெல்லி ரசிகர்களை வாயடைக்க வைத்தது.

சஞ்சு சாம்சன் - கார்த்திக் சர்மா மேஜிக்

இந்த போட்டியின் உண்மையான ஹீரோ சஞ்சு சாம்சன் தான். தொடக்க வீரராகக் களம் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 52 பந்துகளைச் சந்தித்த சஞ்சு சாம்சன் 87 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 இமாலய சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 167.30 ஆக இருந்தது. அவருக்கு இணையாக மிரட்டிய இளம் புயல் கார்த்திக் சர்மா, 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டிற்கு 114 ரன்களைச் சேர்த்து சிஎஸ்கே-வின் வெற்றியை மிக எளிதாக்கியது.

IPL 2026 CSK Chases Down 156 with Ease as Sanju Samson and Karthik Sharma Decimate Delhi Capitals

சிஎஸ்கே பேட்டிங்

156 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்குத் தொடக்கம் சற்று அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்களில் லுங்கி என்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த உர்வில் படேல் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அக்சர் படேல் சுழலில் சிக்கினார். 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் கார்த்திக் சர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி எந்த இடத்திலும் டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. நிதானமாகத் தொடங்கி பின்னர் அதிரடிக்கு மாறிய இவர்கள், 17.3 ஓவர்களிலேயே சிஎஸ்கே அணியை 159 ரன்கள் எடுக்க வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.

டெல்லி பந்துவீச்சாளர்களின் சொதப்பல்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு மிகவும் பரிதாபமாக இருந்தது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தும் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. குறிப்பாக நடராஜன் பந்துவீச்சை சஞ்சு சாம்சன் ஒரு கை பார்த்தார். 2.3 ஓவர்களிலேயே நடராஜன் 39 ரன்களை வாரி வழங்கினார். அவரது எகானமி 15.60 ஆக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து ஏமாற்றினார். கேப்டன் அக்சர் படேல் மற்றும் லுங்கி என்கிடி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினாலும், அவர்களால் சிஎஸ்கே-வின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

IPL 2026: டெல்லி அணியை சுருட்டிய சிஎஸ்கே.. சமீர் ரிஸ்வி அதிரடியால் தப்பிய மானம்.. குறைவான ஸ்கோர்

IPL 2026: டெல்லி அணியை சுருட்டிய சிஎஸ்கே.. சமீர் ரிஸ்வி அதிரடியால் தப்பிய மானம்.. குறைவான ஸ்கோர்

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 10 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி ஃபார்ம் மற்றும் கார்த்திக் சர்மாவின் முதிர்ச்சியான ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே அதிரடியைத் தொடர்ந்தால் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.

Story first published: Tuesday, May 5, 2026, 23:13 [IST]
Other articles published on May 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+