Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: முதல் வெற்றியை பெற்ற சிஎஸ்கே.. தோல்வி பயணத்திற்கு முடிவு.. ஃபில்டிங், பவுலிங்கில் அபாரம்

சென்னை: ஐபிஎல் 2026 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தது. சிஎஸ்கே கேப்டன் சஞ்சு சாம்சனின் மிரட்டலான சதம் இந்தப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதல், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது.

நடப்பு சீசனில் சிஎஸ்கே வெல்லும் முதல் போட்டியாகும். அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து 6 போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் தோற்ற நிலையில், சிஎஸ்கே அணி நீண்ட நாள் கழித்து சொந்த மண்ணில் வென்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதல் இறுதி வரை நிலைத்து நின்று, வெறும் 56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்து தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். 18வது ஓவரின் ஐந்தாவது பந்தில் நடராஜன் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து தனது சதத்தை அசத்தலாக நிறைவு செய்தார், அச்சமயத்தில் அணியின் ஸ்கோர் 17.5 ஓவர்களில் 180/1 ஆக இருந்தது.

சாம்சனுக்கு பக்கபலமாக துணை நின்ற அயுஷ் மகாத்ரேவும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கினார். அவர் 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அரை சதம் அடித்தார். குறிப்பாக, 15வது ஓவரின் முதல் பந்தில் நடராஜன் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தை வெறும் 27 பந்துகளிலேயே எட்டினார். சாம்சன் மற்றும் மகாத்ரே ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு அபாரமாக ஆடி, 68 பந்துகளில் மொத்தம் 113 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

சுமார் 17.3 ஓவர்களில், தனது சிறந்த பங்களிப்பை அளித்த பின்னர் அயுஷ் மகாத்ரே "ரிட்டயர்ட் அவுட்" ஆகி களத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக அதிரடி வீரர் ஷிவம் தூபே களமிறங்கினார். தூபே தனது வருகையை ஒரு சிக்ஸருடன் பதிவு செய்தார், 20வது ஓவரின் முதல் பந்தில் முகேஷ் குமார் பந்துவீச்சில் ஒரு பிரம்மாண்டமான சிக்ஸர் அடித்து அணியின் மொத்த ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். இறுதியில் சென்னை அணி 212/2 என்ற வலுவான நிலையில் தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது.

213 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் பதும் நிஸ்ஸங்கா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். அக்விப் ஹொசைன் வீசிய முதல் ஓவரிலேயே நோ-பால் மற்றும் ஃப்ரீ-ஹிட்டுடன் ஹொசைன் தடுமாற, நிஸ்ஸங்கா அதை பவுண்டரிக்கு அடித்து தொடக்கத்திலேயே ரன் சேர்ப்பைத் தொடங்கினார். ராகுல் தனது ஃப்ரீ-ஹிட் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ரன் சேர்க்க, முதல் ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன.

கலீல் அகமது வீசிய இரண்டாவது ஓவரில் இலங்கைப் பேட்ஸ்மேன் நிஸ்ஸங்கா இரண்டு பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தார். ராகுல், அகீல் ஹொசைன் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் தனது சிறந்த ஃபார்மை வெளிப்படுத்த, டெல்லி அணி வெறும் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் என்ற மைல்கல்லை அடைந்து சென்னை ரசிகர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால், கே.எல். ராகுலின் விக்கெட்டில் சென்னை அணிக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. கலீல் அகமது வீசிய பந்தை ஜேமி ஓவர்ட்டன் சிறப்பாக கேட்ச் பிடிக்க, ராகுல் 18 ரன்களில் வெளியேறினார்.அன்சுல் கம்போஜ் தனது முதல் பந்தில் நிஸ்ஸங்காவின் கேட்சை தவறவிட்டாலும், அடுத்த பந்திலேயே அவரை 45 ரன்களில் வீழ்த்தி பழிவாங்கினார். தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரெவிஸ் அந்த கேட்ச்சை பிடித்தது சென்னை ரசிகர்களுஙககு மகிழ்ச்சியை அதிகரித்தது.

இளம் பந்துவீச்சாளர் குர்ஜன்பிரீத் சிங் தனது முதல் டெலிவரியிலேயே டெல்லி கேப்டன் அக்ஸர் படேலை (1 ரன்) வீழ்த்தி டெல்லி அணிக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார். சர்பராஸ் கான் பிடித்த மிக அற்புதமான ஒரு கேட்ச் மூலம் இந்த விக்கெட் பறிபோனது. சென்னை ரசிகர்கள் இதனால் உற்சாக வெள்ளத்தில் மூழ்க, ஆட்டத்தின் போக்கு முற்றிலும் சென்னைக்கு சாதகமாக மாறத் தொடங்கியது.

சென்னை அணியின் முன்னாள் வீரரான சமீர் ரிஸ்வி, ஜேமி ஓவர்ட்டன் பந்துவீச்சில் மீண்டும் ப்ரெவிஸ் பிடித்த கேட்ச்சால் அவுட்டாக, சேப்பாக்கம் மைதானம் ஆர்ப்பரித்தது. டெல்லி அணியின் விக்கெட் சரிவு தொடரவே, ஆட்டத்தின் நடுப்பகுதியில் 10 ஓவர்களில் 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய வலிமையான தென் ஆப்பிரிக்க ஜோடி களத்தில் இருந்தாலும், அழுத்தத்தை சமாளிப்பது கடினமாக இருந்தது.

டேவிட் மில்லர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் டெல்லிக்கு நம்பிக்கையளிக்க முயன்றார். அவர் நூர் அஹ்மத் பந்துவீச்சில் ஒரு பெரிய சிக்ஸரும், அதைத் தொடர்ந்து பவுண்டரியும் அடித்து அசத்தினார். ஆனால் ஜேமி ஓவர்ட்டன் வீசிய மாயாஜால பந்தில் மில்லர் கிளீன் பவுல்டாகி வெளியேறினார். அந்த அதிவேக பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. இது டெல்லி அணியை 12.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் மேலும் சரிவுக்குத் தள்ளியது. புதிய பேட்ஸ்மேனாக அசுதோஷ் சர்மா களமிறங்கினார்.

மிகுந்த அழுத்தத்திற்கு மத்தியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனி ஆளாகப் போராடி, 17 ஓவர்களில் தனது அரை சதத்தை எட்டி டெல்லி அணியின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தார். ஆனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த கடினமான சூழலில், அசுதோஷ் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் டெல்லி அணியின் கடைசி அங்கீகரிக்கப்பட்ட பேட்டிங் ஜோடியாக களத்தில் தாக்குப்பிடிக்க முயற்சித்தனர்.

ஜேமி ஓவர்ட்டன் தனது சிறப்பான பந்துவீச்சைத் தொடர்ந்து அக்கிப் நபியை வீழ்த்தி தனது மூன்றாம் விக்கெட்டைப் பதிவுசெய்தார். அவரது பந்துவீச்சு திறமை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. தென்னாப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 18.3 ஓவரில் ஓவர்ட்டனின் நான்காவது விக்கெட்டாக வெளியேற, டெல்லியின் கடைசி வெற்றிக் கனவும் தகர்ந்தது. அடுத்து, குல்தீப் யாதவ் அன்சுல் கம்போஜ் பந்துவீச்சில் ப்ரெவிஸ் பிடித்த கேட்ச்சில் வீழ்ந்து ஒன்பதாவது விக்கெட்டை இழந்தார்.

நூர் அகமது அசுதோஷ் ஷர்மாவின் விக்கெட்டை எடுக்க, டெல்லி அணி 14.5 ஓவரில் 149/6 ரன்களில் தடுமாறியது. அன்சுல் கம்போஜ் அந்த கேட்ச்சை சிறப்பாகப் பிடித்தார். இறுதியாக, டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்த சீசனின் முதல் அபார வெற்றியை பதிவு செய்து, முக்கியமான புள்ளிகளையும் தமதாக்கியது. அகீல் ஹொசைன், ஆயுஷ் மகாத்ரேவிற்கு பதிலாக சென்னை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கினார்.

Story first published: Saturday, April 11, 2026, 23:46 [IST]
Other articles published on Apr 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+