IPL 2026: கலீல் அஹமதுக்கு பதில் இந்த 2 பேரில் ஒருவரை சிஎஸ்கே சேர்க்கலாம்.. முன்னாள் வீரர் கருத்து
அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கலீல் அஹமதுக்கு பதிலாக யாரை சிஎஸ்கே களமிறக்க போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, இந்தத் தேர்வு மூலம், சிஎஸ்கே அணி தனது பேட்டிங் ஆழம் குறித்த பிரச்சனையையும் தீர்க்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் போட்டியில் சனிக்கிழமை ஹைதராபாத்தில் சிஎஸ்கேவும், சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன. சிறந்த ரன் ரேட் காரணமாக ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலீல் அஹமது இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, கலீல் அஹமதுக்கு மாற்றாக முகேஷ் சவுத்ரி அல்லது ராமகிருஷ்ண கோஷ் ஆகியோரைப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார். "கலீல் அஹமதுக்கு பதிலாக யார் வருவார்கள்? இந்த ஆட்டத்தில் யாரை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? அவருக்கு பதிலாக முகேஷ் சவுத்ரியை கொண்டு வருவீர்களா, அல்லது உங்கள் பேட்டிங் ஏழாவது இடத்தில் முடிவடைவதால் கோஷை கொண்டு வர விரும்புவீர்களா?"
"ஜேமி ஓவர்டன் ஏழாவது இடத்தில் இருக்கக்கூடாது. அவர் எட்டாவது இடத்தில் பேட் செய்யும் ஒரு வீரர். இதுவரை இது பெரிய வித்தியாசத்தைக் காட்டவில்லை. வெற்றி ஹாட்ரிக் அடிக்க நீங்கள் விரும்புகிறீர்கள். குஜராத் டைட்டன்ஸ் செய்தது போல, தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற வேண்டும், ஆனால் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஃபார்ம் ஒரு கேள்விக்குறிதான், ஏனென்றால் ஆயுஷ் மகாத்ரே அவருக்கு கடும் போட்டி அளிக்கிறார்"
நடப்பு ஐபிஎல் தொடரில், ருதுராஜ் ஐந்து இன்னிங்ஸ்களில் 12.60 சராசரியில் வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஆட்டம் கவலையளிப்பதாக உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் லியாம் லிவிங்ஸ்டோனை சேர்ப்பது குறித்த தனது கருத்தை ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தினார். "அவர்கள் டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், ஈஷான் மாலிங்கா என மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடுகிறார்கள். எனவே லிவிங்ஸ்டோன் நான்காவது வீரராக இருக்கலாமா, அல்லது தில்ஷான் மதுஷங்கா தற்போது கிடைப்பாரா என்று நீங்கள் யோசிக்கலாம்"
ப்ரைடன் கார்ஸுக்கு மாற்று வீரராக சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்த தில்ஷான் மதுஷங்காவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பில்லை. கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பிரஃபுல் ஹிங்கே (4 ஓவர்களில் 4/34) மற்றும் சாகிப் ஹுசைன் (4 ஓவர்களில் 4/24) அபாரமாக பந்துவீசியதே இதற்குக் காரணம்.
இளம் பந்துவீச்சாளர்களின் எழுச்சி குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "நீங்கள் அவரைப் பற்றி யோசிக்கலாம், இருப்பினும் இப்போது அவர்களிடம் பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன் இருக்கிறார்கள். இது ஒரு நல்ல செய்தி. முன்பு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி மீதுதான் கவனம் இருந்தது.
இப்போது அந்த கவனம் சற்று புதிய வீரர்கள் மீது திரும்பிவிட்டது. கடந்த ஆட்டத்தில் அவர்கள் முக்கிய இடத்தைப் பிடித்தனர். ஷிவாங் குமார் அருமையாகப் பந்துவீசுகிறார். அவரை போட்டியின் நடுப்பகுதியில் நன்றாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறேன்" என்று ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார்.


Click it and Unblock the Notifications