IPL 2026: சர்பராஸ் கான் கிடையாது.. சிஎஸ்கே அணிக்குள் தோனி வந்தால் வெளியேற போவது இவர் தான்- பத்ரிநாத்
மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எதிரான போட்டியில் சிஎஸ்கே சரியான அணியுடன் களமிறங்கியதாகக் கருத்துத் தெரிவித்தார். தோனியின் கம்பேக்கை மனதில் வைத்தே இந்த அணித் தேர்வு நடந்ததாக அவர் குறிப்பிட்டார். தொடை தசைப் பிடிப்பு காரணமாக 3ஆம் வரிசை பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே தொடரில் இருந்து விலகிய நிலையில், உர்வில் பட்டேல் அவருக்குப் பதிலாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிஎஸ்கே சரஃபராஸ் கானை 3ஆம் வரிசைக்கு உயர்த்தி, கார்த்திக் ஷர்மாவை 6ஆம் வரிசையில் களமிறக்கியது. கார்த்திக் 19 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்த நகர்வு பின்னடைவாகத் தோன்றியது. எனினும், பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில், தோனியின் வருகையை கருத்தில் கொண்டே கார்த்திக்கை தேர்வு செய்த முடிவை நியாயப்படுத்தினார்.

இது குறித்து பேசிய பத்ரிநாத், "கார்த்திக் ஷர்மா, விக்கெட் கீப்பராகவும், 6ஆம் வரிசை பேட்ஸ்மேனாகவும் களமிறங்கினார். இதனால் தோனி நேரடியாக அவரை மாற்ற முடியும். இது தோனி திரும்புவதற்கான வழியைத் தரும், அணியின் சமநிலையை பாதிக்காமல் ஒரு மாற்றம் நடக்கும் என்பதை உறுதி செய்யும். எனினும் உர்வில் பட்டேல் இந்தப் போட்டியில் விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்தோம்," என்றார்
தோனி அடுத்தப் போட்டிக்குத் தயாராக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என பத்ரிநாத் சுட்டிக்காட்டினார். அவ்வாறு நடந்தால், கார்த்திக் ஷர்மாவுக்குப் பதிலாக அவர் நேரடியாக அணிக்குள் வருவார். "தோனியின் வருகையை மனதில் வைத்தே இந்தப் போட்டிக்கான மாற்றங்களை செய்தனர். அதனால்தான் ஆயுஷ் மகாத்ரேவின் இடத்தில் சரஃபராஸ் கான் 3ஆம் வரிசைக்கு உயர்த்தப்பட்டார்," என்று அவர் விளக்கினார்.
கார்த்திக்கின் ஆட்டம் மோசமாக இருந்தபோதிலும், சிஎஸ்கே 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்து, மும்பை இந்தியன்ஸை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னால், சிஎஸ்கேயின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடுவது மிகவும் அவசியம் என்று பத்ரிநாத் வலியுறுத்தினார்.
இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால் சாம்சன் சிறப்பாக ஆடிய அனைத்து மூன்று முறையும் சிஎஸ்கே வென்றது. கேரள வீரர் சாம்சன் 40 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்று போட்டிகளிலும் மஞ்சள் படை வெற்றி பெற்றது. அதே சமயம், அவர் 40 ரன்களுக்குக் குறைவாக எடுத்த நான்கு போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியடைந்தது.
"சாம்சன் அல்லது கெய்க்வாட் இவர்களில் ஒருவர் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடுவது மிக அவசியம். இந்த சீசன் முழுவதும் சாம்சன் அப்படி ஆடியபோது, சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இதுவே சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய காரணம் ஆகும். சஞ்சு, சச்சினை சந்திப்பது அவருக்கு அதிசயமாய் வேலை செய்கிறது," என்றார் பத்ரிநாத்.
டி20 உலகக் கோப்பையிலும், இந்தப் போட்டிக்கு முன்னரும் கூட சாம்சன் சச்சினை சந்தித்ததாகவும் பத்ரிநாத் குறிப்பிட்டார். "ருதுராஜும் மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்ப வேண்டும். அவரது தன்னம்பிக்கை மிகவும் குறைவாக உள்ளது," என்றும் அவர் கவலையுடன் தெரிவித்தார். சஞ்சு சாம்சன், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சமீபத்திய வெற்றியில் 54 பந்துகளில் 101* ரன்கள் குவித்து, இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் ஏழு இன்னிங்ஸ்களில் 58.60 சராசரியிலும், 178.65 ஸ்ட்ரைக் ரேட்டிலும் மொத்தம் 293 ரன்கள் குவித்து, அற்புதமான பார்மில் உள்ளார்.


Click it and Unblock the Notifications

