Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: நீதான்யா சிஎஸ்கே-வுக்கு தேவை.. ஒரே ஓவரில் 2 விக்கெட்.. SRH அணியை மிரட்டிய முகேஷ் சவுத்ரி!

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். அபிஷேக் ஷர்மாவின் அதிரடியால் சிஎஸ்கே அணி நிலைகுலைந்து போயிருந்த நிலையில், முகேஷ் வீசிய அந்த ஒரு ஓவர் சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்ததா? ஆட்டத்தின் இறுதியில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா இடி மின்னலாகத் தொடக்கம் கொடுத்தார். சென்னை பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த அவர், வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சிஎஸ்கே அணிக்கு கடும் பதற்றத்தை ஏற்படுத்தினார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட அபிஷேக் ஷர்மாவைக் கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் திணறிக்கொண்டிருந்தார்.

IPL 2026 CSK Mukesh Choudhary took Travis Head and Ishan Kishan wickets CSK Fights Back SRH

இந்தச் சூழலில் ஆட்டத்தின் 6-வது ஓவரை வீச முகேஷ் சவுத்ரி அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ஃபோர் அடிக்கப்பட்ட நிலையில், 5-வது பந்தில் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டை 23 ரன்களில் (20 பந்துகள்) முகேஷ் வீழ்த்தினார். இதைக் கண்டு ரசிகர்கள் உற்சாகமடைவதற்குள், அடுத்த பந்திலேயே ஹைதராபாத் அணியின் கேப்டன் இஷான் கிஷனை தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்கவிடாமல் 'டக் அவுட்' செய்து வெளியேற்றினார். அடுத்தடுத்த பந்துகளில் விழுந்த இந்த 2 விக்கெட்டுகள் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய முன்னிலையைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், சென்னை அணியின் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. விக்கெட்டுகள் விழுந்தாலும் அபிஷேக் ஷர்மா தனது அதிரடியை நிறுத்தவில்லை. அவர் 22 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் புகுந்த அதிரடி மன்னன் ஹென்ரிச் கிளாசன், சென்னை பந்துவீச்சை மீண்டும் சிதறடித்தார். 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 69 ரன்கள் விளாசினார்.

முகேஷ் சவுத்ரி கொடுத்த இரட்டை அதிர்ச்சியையும் மீறி, ஹைதராபாத் அணி ஒவ்வொரு ஓவருக்கும் சராசரியாக 10 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களைக் குவித்தது. அபிஷேக் ஷர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணி ஒரு இமாலய ஸ்கோரை நோக்கிச் சென்றது.

Story first published: Saturday, April 18, 2026, 21:04 [IST]
Other articles published on Apr 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+