Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: பதிராணாவை விடுவிக்கும் சிஎஸ்கே.. தோனி பேச்சை கேட்காததால் அதிரடி முடிவு

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் இலங்கையின் நட்சத்திர வீரர் பதிராணாவை விடுவித்துள்ளது. ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு பதிராணாவை சிஎஸ்கே அணி வாங்கியது. இதே போன்று 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு 13 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொண்டது.

மலிங்கா போல் இறுதி கட்டத்தில் அபாரமான யாக்கர்களை வீசி பேட்ஸ்மேனுக்கு பதிராணா நெருக்கடி கொடுப்பார். கடந்த 2023 ஐபிஎல் சீசனில் பதிராணா 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே வின் செல்ல பிள்ளையாக மாறினார். பதிராணா வருகை மூலம் சிஎஸ்கே அணி ஐந்தாவது கோப்பையை கைப்பற்றியது.

Matheesha Pathirana

அப்போது பதிராணா மிகவும் அரிய ஒரு பவுலர் என்றும் அவரை வெறும் டி20 கிரிக்கெட்டை மட்டும் பயன்படுத்துங்கள் என்றும் தோனி இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கூறி இருந்தார். டெஸ்ட், ஒரு நாள் என பதிராணாவை அனைத்து விதமான போட்டிகளிலும் பயன்படுத்தினால், அவருடைய உடல் தகுதி மற்றும் பார்ம் அனைத்துமே பாதிக்கும் என்று தோனி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் தோனியின் பேச்சை கேட்காத இலங்கை அணி நிர்வாகம் அவரை தொடர்ந்து அனைத்து விதமான போட்டிகளிலும் பயன்படுத்தியது. இதன் காரணமாக பதிராணா தன்னுடைய பந்துவீச்சில் சரிவை சந்தித்தார். மேலும் உடல் தகுதியிலும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. கடந்த ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 14 காயம் காரணமாக விளையாடவில்லை. இதே போன்று எஸ்ஏ 20 தொடரில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக பாதியில் அவர் வெளியேறினார்.

அதேபோன்று 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 12 போட்டியில் விளையாடிய பதிராணா 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் சில மாதங்களாக அடிக்கடி காயங்களை சந்தித்து வந்தார். இது குறித்து ஆலோசனை நடத்திய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங், இலங்கை கிரிக்கெட் வாரிய பயிற்சி குழுவினர் பதிராணாவின் பந்துவீச்சு முறையை அடிக்கடி மாற்றுவதாகவும், இதுதான் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும் கூறியுள்ளது.

இதன் காரணமாக பதிராணாவை விடுவிக்க சிஎஸ்கே அணி முடிவு எடுத்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக மூன்று சீசனங்களில் 32 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை அவர் வீழ்த்திருக்கிறார். குறைந்த விலை கொடுத்து மீண்டும் சிஎஸ்கே அணியே பதிராணாவை வாங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, November 15, 2025, 13:48 [IST]
Other articles published on Nov 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+