Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே அணியில் அதிரடி.. கர்நாடக ஆல்ரவுண்டர் மேக்நீல் நோரோன்ஹா அணியில் சேர்ப்பு

சென்னை: 2026 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாகப் போராடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது அணியில் ஒரு அதிரடி மாற்றத்தை செய்துள்ளது. காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் ராமகிருஷ்ணா கோஷுக்கு பதிலாக, கர்நாடகாவைச் சேர்ந்த 24 வயது இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மேக்நீல் நோரோன்ஹாவை ஒப்பந்தம் செய்துள்ளது. அணியில் ஏற்பட்டுள்ள தொடர் காயங்கள் மற்றும் புதிய வீரரின் வருகை சிஎஸ்கே அணிக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த சீசன் முழுவதுமே காயம் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ஆரம்பத்திலேயே கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, நாதன் எல்லிஸ் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் என பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். மூத்த வீரர் தோனியும் காயம் காரணமாக இதுவரை விளையாடவில்லை. இந்த நிலையில், மே 2-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ராமகிருஷ்ணா கோஷ், தனது முதல் போட்டியிலேயே வலது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு தொடரிலிருந்து முழுமையாக வெளியேறினார். அந்தப் போட்டியில் அவர் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

IPL 2026 CSK Sign Karnataka All-Rounder Macneil Noronha as Replacement for Injured Ramakrishna Ghosh

ராமகிருஷ்ணா கோஷின் இழப்பை ஈடுகட்ட, தற்போது கர்நாடகாவின் இளம் வீரரான மேக்நீல் ஹெட்லி நோரோன்ஹாவை சிஎஸ்கே அணி தேர்ந்தெடுத்துள்ளது. நோரோன்ஹா ஒரு சிறந்த 'ஆஃப்-ஸ்பின்' ஆல்ரவுண்டர் ஆவார். சமீபத்தில் நடந்த 2025 மகாராஜா கோப்பை உள்ளூர் டி20 தொடரில் மங்களூரு டிராகன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தனது அபாரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

அந்தத் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 148.82 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 253 ரன்களைக் குவித்தார். இதில் 19 பிரம்மாண்ட சிக்ஸர்களும் அடங்கும். மேலும், பந்துவீச்சிலும் 7.44 எக்கானமியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நோரோன்ஹாவின் இந்தச் சிறப்பான ஆட்டம் அவருக்கு கர்நாடக அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. அதுமட்டுமின்றி, சி.கே. நாயுடு டிராபியில் அதிக ரன்கள் குவித்ததற்காக பிசிசிஐ வழங்கிய 'நமன் விருதை' பெற்றார். சிஎஸ்கே அணியின் பின்வரிசை பேட்டிங்கை பலப்படுத்தவும், சுழற்பந்து வீச்சில் கூடுதல் பலம் சேர்க்கவும் இவரது வருகை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026: 86 ரன்னில் சுருண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத்.. புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற குஜராத்

IPL 2026: 86 ரன்னில் சுருண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத்.. புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற குஜராத்

தற்போது புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணி, பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேக்நீல் நோரோன்ஹாவை அணியில் சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே அணி கோரிக்கை விடுத்துள்ளது.

Story first published: Wednesday, May 13, 2026, 7:32 [IST]
Other articles published on May 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+