Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே இதயத்தை நொறுக்கும் செய்தி! அதிரடி வீரர் பிரவீஸ் காயம்.. RR போட்டியிலிருந்து விலகல்

சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காயம் தொடர்பான சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவால்ட் பிரேவிஸ், பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, மார்ச் 30 அன்று கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் இதனை உறுதிப்படுத்தினார். ஏப்ரல் 3 அன்று பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் பிரேவிஸ் பங்கேற்பது சந்தேகமேயானாலும், அவர் விரைந்து குணமடைவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வார இறுதியில் ஏற்பட்ட இரண்டாவது காயம் இது. தோனிக்கு கால்ப் காயம் ஏற்பட்டதால், ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளை அவர் தவறவிடுவார். தோனி கௌஹாத்திக்கு அணிக்குடன் பயணிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் தொடைத்தசைப் பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக வந்த ஸ்பென்சர் ஜான்சன், காயத்திலிருந்து (back stress injury) மீண்டு வருகிறார். அவர் ஏப்ரல் 21 முதல் 23 வரை அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக, டேவால்ட் பிரேவிஸ் சீசனின் நடுப்பகுதியில் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் 2025ல் CSK-வின் சவாலான பயணத்தில் நம்பிக்கையூட்டிய அவர், ஆறு போட்டிகளில் 37.50 சராசரியுடன் 225 ரன்கள் குவித்து, 180 ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்தார். பிரவீஸ் சிஎஸ்கே பேட்டிங்கின் முக்கிய பகுதியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விலகி இருப்பது பெரும் சிக்கலை சிஎஸ்கேக்கு ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, March 29, 2026, 21:16 [IST]
Other articles published on Mar 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+