IPL 2026- சிஎஸ்கே வீரர் சர்பராஸ் கான் 2556 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் வரலாற்றில் அரைசதம்
பெங்களூரு: ஐபிஎல் போட்டியில் சர்பராஸ் கான் 2,556 நாட்களுக்குப் பிறகு அரைசதம் அடித்தார். ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் அடித்த இந்த அதிரடி அரைசதம், அவரது இரண்டு ஐபிஎல் அரைசதங்களுக்கு இடையே உள்ள இரண்டாவது மிக நீண்ட இடைவெளி ஆகும்.. இது அவருக்கு முக்கிய மைல்கல் ஆகும்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்பராஸ் தனது திறனை வெளிப்படுத்துவது புதியதல்ல. 2015-ஆம் ஆண்டில், ஆர்சிபி அணிக்காக 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து, 200/7 என்ற இலக்கை எட்ட உதவினார். 11 ஆண்டுகளுக்குப் பின் அதே மைதானத்திற்குத் திரும்பிய அவர், இம்முறை ஆர்சிபிக்கு எதிராக தனது இரண்டாவது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்தார்.

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி நிர்ணயித்த 250/3 என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, ஆரம்பமே சொதப்பியது. முதல் மூன்று பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மத்ரே ஆகியோர் சேர்ந்து வெறும் 17 ரன்கள் எடுத்தனர். அப்போது களமிறங்கிய சர்பராஸ் கான், 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக அரைசதம் விளாசினார்.
சர்பராஸின் அதிரடி ஆட்டத்தால், சிஎஸ்கே 30/3 என்ற நிலையிலிருந்து 19 பந்துகளில் 77/3 என முன்னேறியது. இது அவரது ஐபிஎல் வாழ்க்கையின் இரண்டாவது அரைசதமாகும். 2019 ஏப்ரல் 6 அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனது முதல் அரைசதத்தை அடித்த அவர், சரியாக 2,556 நாட்களுக்குப் பிறகு, 2026 ஏப்ரல் 5 அன்று, தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்பராஸ் கான் அரைசதம் அடித்துள்ளார். அவரது 2,556 நாள் இடைவெளி, க்ருனால் பாண்டுயாவின் 3,269 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மிக அதிகம். கருண் நாயர் (2,520), டிராவிஸ் ஹெட் (2,516), விரிதிமான் சஹா (2,191), ட்வேன் பிராவோ (2,168) ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.
முன்னதாக, ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து, டிம் டேவிட், ரஜத் பட்டிதார் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக 250/3 என்ற பெரிய ஸ்கோரை எடுத்தது. படிக்கல் 50 ரன்களும் ஃபில் சால்ட் 46 ரன்களும் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தனர்.
படிக்கல் நிலைத்து நின்று ஆடி, 15 ஓவர்களுக்குள் ஆர்சிபி 150-ஐ கடக்க உதவினார். பின்னர், ரஜத் பட்டிதார் (48*) மற்றும் டிம் டேவிட் (70*) இணைந்து கடைசி ஓவர்களில் அதிரடி காட்டினர். 99 ரன்கள் பிரிக்கப்படாத பார்ட்னர்ஷிப் அமைத்து, கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 97 ரன்களைக் குவித்தனர். சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் தடுமாறியதால், சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ஆதிக்கம் செலுத்தியது.


Click it and Unblock the Notifications