Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிறுத்தை போல் பாய்ந்த கேட்ச் பிடித்த CSK வீரர் சர்ஃபராஸ் கான்.. ஆட்டத்தையே மாற்றிய கேட்ச்

சென்னை: ஐபிஎல் 2026 தொடரில், சென்னை, மும்பை இந்தியன்ஸ் மோதிய ஆட்டத்தில், ஜேமி ஓவர்ட்டன் பந்துவீச்சில், சென்னை அணியின் சர்பராஸ் கான் மிகச்சிறப்பான கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த அபாரமான போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முதலில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜாக்ஸ் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் ரிக்கில்டனும் நமன் தீரும் இணைந்து 58 ரன்கள் குவித்து அணியை பலப்படுத்தினர். பவர்ப்ளேயின் முடிவில், 24 பந்துகளில் 37 ரன்களுடன் ரிக்கில்டன் நூர் அஹமது பந்துவீச்சில் வீழ்ந்தார். சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் கோஷ் பந்துவீச்சில் அவுட்டானார்.

தொடர்ந்து, திலக் வர்மா 5 ரன்களில் கேப்டன் ரூத்துராஜ் கெய்க்வாட் பிடித்த கேட்ச்சால் நூர் அஹமது பந்துவீச்சில் வெளியேறினார். நமன் தீர் கொடுத்த சுலபமான கேட்சை சிவம் துபே கோட்டை விட, அதனை பயன்படுத்தி கொண்டு அவர் 37 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.

இந்த தருணத்தில் ஜெமி ஓவர்டன் வீசிய பந்தில், நமர் தீர் ஷாட் அடிக்க யாரும் எதிர்பாராத வகையில் சர்பராஸ் கான் பாய்ந்து ஒரு அற்புதமான கேட்சை பிடித்து ஆர்ப்பரித்தார். இதனை பார்த்ததும் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இதே போன்று அறிமுக வீரரான ராம் கோஷ் பவுண்டரி லைனில் ஒரு மெய் சிலிர்க்கும் கேட்சை பிடித்து அசத்தினார்.

முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து நிறுத்தப்பட்டது.சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் அன்சூல் காம்போஜ் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அகில் ஹொசனை சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் சேர்க்காதது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

Story first published: Saturday, May 2, 2026, 21:51 [IST]
Other articles published on May 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+