Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: நாங்க என்ன முட்டாள்களா? சிஎஸ்கே கேப்டன் ருதுராஜை கடுமையாக சாடிய பத்ரிநாத்

சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சேப்பாக்கம் ஆடுகளத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்,கடுமையாக விமர்சித்துள்ளார். ஏப்ரல் 3 அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே 209 ரன்கள் எடுத்தும், பஞ்சாப் அதை எளிதாகத் துரத்தி வெற்றி பெற்றதையடுத்து இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிஎஸ்கே அணி முதல் இன்னிங்ஸில் 209/5 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மாத்ரே 73 (43), சிவம் தூபே 45 (27), மற்றும் சர்பராஸ் கான் 32 (12) ரன்கள் என சிறப்பான பங்களித்தனர். ஆனால், தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட்,28 (22) ரன்கள் எடுத்தது பத்ரிநாத்தின் விமர்சனத்தை பெற்றது. கெய்க்வாட் ஆடுகளத்தைப் பற்றி தவறாகக் கணித்ததாக பத்ரிநாத் கடுமையாகக் கூறினார்.

பஞ்சாப் அணி 209 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களிலேயே எளிதில் துரத்தியது. ஆயினும், போட்டிக்குப் பிறகு கெய்க்வாட், ஆடுகளம் சுழற்பந்து மற்றும் மெதுவான பந்துகளுக்கு 'பிடிமானம்' கொடுத்ததாகவும், 209 ஒரு 'நல்ல ஸ்கோர்' என்றும் குறிப்பிட்டார். ஆனால், இடைவேளையின்போது பிபிகேஎஸ் பந்துவீச்சாளர் விஜய் குமார் வைஷாக், தனது மெதுவான பந்துகள்கூடப் பிடிமானம் பெறவில்லை என்று கூறியது கவனிக்கத்தக்கது.

இது குறித்து பேசிய பத்ரிநாத், "நாங்கள் மூடர்களா? அதை நம்புவதற்கு? ஆடுகளம் எப்படி மெதுவாக இருந்தது? நீங்கள் 209 ரன்கள் அடித்தீர்கள், ஆனால் ரன் சேஸின் ஒரு நிமிடம் கூட, ஒரு பந்து கூட, ஒரு ஓவர் கூட, எதிரணி அழுத்தத்தில் இல்லை. அப்படியென்றால் ஆடுகளம் எப்படி மெதுவாக இருந்தது?" என பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் கேள்வி எழுப்பினார்.

சிஎஸ்கே பந்துவீச்சாளர்களால் அழுத்தத்தை உருவாக்க முடியாததே தோல்விக்கான காரணம் என கெய்க்வாட் கருதுவதாக பத்ரிநாத் விளக்கினார். இருப்பினும், தனது விமர்சனங்களுக்கு இடையிலும், நடுவரிசை அனுபவமின்மையால் தொடக்க ஓவர்களில் ஆக்ரோஷமாக விளையாடாத கெய்க்வாட்டை குறைசொல்ல முடியாது என பத்ரிநாத் கூறினார்.

நடுவரிசையில் கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர் மற்றும் சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுடன், சிவம் தூபே மட்டுமே அனுபவம் வாய்ந்தவராக இருந்தார். இதனால், "சிஎஸ்கே குழப்பத்தில் உள்ளது. ருதுராஜ் ஒரு பெரிய ஷாட் அடித்து ஆட்டமிழந்திருந்தால், நடுவரிசை முற்றிலும் வெற்றிடமாகியிருக்கும்," என்று பத்ரிநாத் தெரிவித்தார்.

கெய்க்வாட் மீது கடும் மன அழுத்தம் இருந்தது, அவர் ஆட்டமிழந்தால் சிஎஸ்கே 140, 150 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்ற பயமே அவரது மெதுவான ஆட்டத்திற்குக் காரணம் என பத்ரிநாத் விளக்கினார். இப்போட்டியில்தோனி மற்றும் டெவால்ட் பிரெவிஸ் காயம் காரணமாக இல்லாததும், சிஎஸ்கே இரண்டு வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே விளையாடியதும் அணியின் பலவீனத்தை உணர்த்தியது.

Story first published: Saturday, April 4, 2026, 17:56 [IST]
Other articles published on Apr 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+