IPL 2026: சிஎஸ்கே-க்கு புதிய ரெய்னா கிடைச்சாச்சி.. 27 பந்துகளில் 50 விளாசிய ஆயுஷ் மாத்ரே
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே 27 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.
முதல் வெற்றிக்காக சிஎஸ்கே அணி போராடிவரும் நிலையில் தற்போது சொந்த மண்ணில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ருதுராஜ் மோசமாக விளையாடி 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

எனினும் மறுமுனையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் ருதுராஜ் அவுட் ஆனது சிஎஸ்கேவுக்கு நன்மையாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் மூன்றாவது வீரராக களம் இறங்கி ஆயுஷ் மாத்ரே அதிரடி காட்டினார்.
டெல்லி அணியின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்த அவர் நான்கு சிக்ஸர், 3 பவுண்டரி என 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கடந்த சீசனில் அணிக்கு மாற்று வீரராக வந்த ஆயுஷ் மாத்ரே, தற்போது தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மூன்றாவது வீரராக ரெய்னா இடத்தில் களமிறங்கும் ஆயுஷ் மாத்ரே, ரெய்னா, எப்படி சிஎஸ்கே அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்துவாரோ, அதேபோல் ஆயுஷ் மாத்ரே விளையாடி வருவதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் ஆயுஷ் மாத்ரே, 37 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ரிட்டையர்ட் அவுட் ஆனார்.
இடது கை பேட்ஸ்மேன் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்பதால் ஆயுஷ் மாத்ரே களத்தை விட்டு வெளியேறி அவருக்கு பதிலாக சிவம் துபே களமிறங்கினார். ஆயுஷ் மாத்ரே, தனது இன்னிங்ஸில் நான்கு சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடித்துள்ளார். எனினும் ஆயுஷ் மாத்ரே ரிட்டயர்டு அவுட் ஆனதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications