For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2026: சஞ்சு சாம்சன் மரண அடி செஞ்சுரி.. மிரள வைத்த சேட்டன்.. சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்தித்து தவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, டெல்லி கேப்பிடல்ஸ்- க்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் புத்துயிர் அளித்துள்ளார். முதல் 3 போட்டிகளில் சொதப்பிய அவர், இந்தப் போட்டியில் அதிரடி சதம் அடித்து சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2026 ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடின. டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

IPL 2026 CSK vs DC Sanju Samson Fires Half-Century 26-Ball Blitz Powers Chennai Super Kings Against Delhi Capitals

கடந்த 3 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனத்துக்குள்ளான சஞ்சு சாம்சன், இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். ருதுராஜ் ஒருபுறம் நிதானம் காட்ட, சாம்சன் டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர், பவுண்டரிகளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன், வெறும் 26 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டி மிரட்டினார். மறுபுறம் நிதானமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னரும் அதிரடியை தொடர்ந்த சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் சதம் கடந்தார். இது அவரது நான்காவது ஐபிஎல் சதம் ஆகும். மேலும், சிஎஸ்கே அணிக்காக அடிக்கும் முதல் சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஐபிஎல் கிரிக்கெட்டே இல்லை.. பாகிஸ்தானின் பிஎஸ்எல்-தான் உண்மையான கிரிக்கெட்”.. SA வீரர் ரூசோ பேச்சு“ஐபிஎல் கிரிக்கெட்டே இல்லை.. பாகிஸ்தானின் பிஎஸ்எல்-தான் உண்மையான கிரிக்கெட்”.. SA வீரர் ரூசோ பேச்சு

தொடர் தோல்விகளால் சோர்ந்து போயிருந்த சென்னை ரசிகர்களுக்கு, சஞ்சு சாம்சனின் இந்த மின்னல் வேக சதம் மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. சேப்பாக்கம் மைதானமே சாம்சனின் ஆட்டத்தால் ஆர்ப்பரித்தது.

Story first published: Saturday, April 11, 2026, 20:30 [IST]
Other articles published on Apr 11, 2026
English summary
IPL 2026 CSK vs DC: Sanju Samson Fires Half-Century: 26-Ball Blitz Powers Chennai Super Kings Against Delhi Capitals. Samson regains form with 26-ball fifty at Chepauk, providing a massive boost to CSK batting.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+