IPL 2026: CSK செல்லக்குட்டி ஃபார்ம்க்கு திரும்பியது.. ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்த்திய நூர் அஹமத்
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான நூர் அகமத் தனது பந்துவீச்சிக் தடுமாறி வந்த நிலையில் தற்போது கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி கடைசி இடத்தில் இருந்தது. இந்த தருணத்தில் டெல்லி அணிக்கு எதிரான சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை சிஎஸ்கே பிடித்தது. இந்த சூழலில் மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொண்டது. இதில் முதலில் கொல்கத்தா அணியால் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
200 ரன்களுக்கு மேல் அடிக்காததால் சிஎஸ்கே அணி என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். எனினும் சிஎஸ்கே அணி பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி கொல்கத்தாவுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். குறிப்பாக அதிரடி வீரர் பின் ஆலன் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க சுனில் நரைன் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஒரு கட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து சிஎஸ்கே அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களால் ரன்கள் சேர்க்க முடியவில்லை.இந்த நிலையில் ஆட்டத்தின் 11 வது ஓவரை நூர் அகமது வீச கேப்டன் ரகானே விக்கெட்டை வீழ்த்தினார்.இதை அடுத்து நடப்பு சீசனில் விலை மதிப்புமிக்க வீரரான கேமரன் கிரீன் களத்திற்கு வந்தார்.
எனினும் அவருடைய விக்கெட்டையும் அடுத்த பந்திலேயே நூர் அஹமத் க்ளீன் போல்ட் ஆக்கினார். இதனால் 85 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.இந்த சீசனில் நான்கு போட்டிகளில் வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்த நூர் அஹமத் கேகேஆர் அணி எதிராக ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி தன்னுடைய கம்பேக்கை பதிவு செய்தார்.
இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதேபோன்று இந்திய அணியின் அதிரடி வீரர் ரிங்கு சிங் விக்கெட்டையும் நூர் அகமத் கைப்பற்ற கொல்கத்தா அணி 90 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications