Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே-வை படுகுழியில் தள்ளிய அன்ஷுல் கம்போஜ்.. இப்படி ஒரு பவுலிங்கை எதிர்பார்க்கவே இல்லை

லக்னோ: 2026 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்துள்ளது. பிளே-ஆப் கனவோடு களம் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு, அந்த அணியின் இளம் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் எமனாக மாறினார். 188 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்த போதிலும், அவரின் மோசமான செயல்பாட்டால் லக்னோ அணி 20 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றியைத் தட்டிச் சென்றது. மேலும், அன்ஷுல் கம்போஜ் சிஎஸ்கே வரலாற்றிலேயே மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

தடுமாறிய சிஎஸ்கே

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, கார்த்திக் சர்மாவின் அதிரடி 71 ரன்களால் 20 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்தது. லக்னோவின் கடினமான ஆடுகளத்தில் இது ஒரு வெற்றிக்குரிய ஸ்கோர் என்றே கருதப்பட்டது. ஆனால், லக்னோவின் மிட்செல் மார்ஷ் புயலாக மாறி 38 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். அவருக்கு சிஎஸ்கே-வின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் வாரி வழங்கிய ரன்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.

IPL 2026 CSK vs LSG Anshul Kamboj s Records Most Runs Conceded for Chennai Super Kings

அன்ஷுல் கம்போஜ் சொதப்பல்

இந்தத் தொடரில் ஒரு நல்ல அறிமுகத்தை எதிர்நோக்கி இருந்த அன்ஷுல் கம்போஜ், சிஎஸ்கே ரசிகர்களை நொந்து போக வைக்கும் அளவிற்கு ஒரு மோசமான சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர், விக்கெட் ஏதும் எடுக்காமல் 63 ரன்களை வாரி வழங்கினார். அவரது எகானமி ரேட் 23.62 ஆகும்.

ஐபிஎல் வரலாற்றில் 3 ஓவர்கள் அல்லது அதற்கும் குறைவாக வீசி 60 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற அவப்பெயரை இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2025-ல் ஆர்சிபி-க்கு எதிராக கலீல் அகமது 3 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்ததே சாதனையாக இருந்தது.

பவுண்டரி மழை

கம்போஜ் வீசிய ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டை நோக்கிப் பறந்தது. அவர் வீசிய மொத்தம் 16 பந்துகளில், 11 பந்துகள் பவுண்டரி அல்லது சிக்ஸர்களுக்குச் சென்றன. அதாவது அவர் வீசிய பந்துகளில் 68.75 சதவீத பந்துகள் பவுண்டரி எல்லைக்கோட்டைத் தாண்டின. ஐபிஎல் வரலாற்றில் 2 ஓவர்களுக்கு மேல் வீசிய 13059 ஸ்பெல்களில், வாஷிங்டன் சுந்தருக்கு (2024-ல் 12 பந்துகளில் 10 பவுண்டரிகள்) அடுத்தபடியாக அதிக பவுண்டரி சதவீதம் கொடுத்தவர் கம்போஜ் தான்.

எட்டு சிக்ஸர்கள்

இந்தப் போட்டியில் கம்போஜ் ஓவர்களில் மட்டும் லக்னோ பேட்ஸ்மேன்கள் 8 சிக்ஸர்களைப் பறக்கவிட்டனர். ஐபிஎல் இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு பந்துவீச்சாளர் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த வரிசையில், யாஷ் தயாலுடன் (2023-ல் கொல்கத்தாவுக்கு எதிராக) இணைந்து கம்போஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சிஎஸ்கே வரலாற்றில் முதலிடம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர்களிலேயே ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் கம்போஜ் முதலிடத்தைப் பிடித்துவிட்டார். இதற்கு முன்னதாக லுங்கி நிகிடி (62 ரன்கள்), ஷர்துல் தாகூர் (61 ரன்கள்), சிமர்ஜீத் சிங் (60 ரன்கள்) ஆகியோர் இருந்தனர். ஆனால் கம்போஜ் வெறும் 16 பந்துகளிலேயே 63 ரன்களைக் கொடுத்து அந்தப் பட்டியலை மாற்றி அமைத்துள்ளார்.

IPL 2026: சிஎஸ்கே அணியால் பிளே-ஆப் செல்ல முடியும் ஆனால்.. தலைசுற்ற வைக்கும் புள்ளிப்பட்டியல் கணக்கு

IPL 2026: சிஎஸ்கே அணியால் பிளே-ஆப் செல்ல முடியும் ஆனால்.. தலைசுற்ற வைக்கும் புள்ளிப்பட்டியல் கணக்கு

நிச்சயமாக வெற்றி பெற வேண்டிய போட்டியில், இப்படி ஒரு பந்துவீச்சை சிஎஸ்கே நிர்வாகமோ அல்லது ரசிகர்களோ எதிர்பார்க்கவில்லை. கம்போஜின் இந்த ஒரு 'ஸ்பெல்' சென்னையின் பிளே-ஆப் கனவை கிட்டத்தட்ட சிதைத்துவிட்டது என்றே கூறலாம். மிட்செல் மார்ஷின் 90 ரன்களுக்குப் பின்னால் கம்போஜின் இந்தப் பரிதாபமான பந்துவீச்சு ஒளிந்துள்ளது.

Story first published: Saturday, May 16, 2026, 0:08 [IST]
Other articles published on May 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+