Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: டெல்லி அணியை சுருட்டிய சிஎஸ்கே.. சமீர் ரிஸ்வி அதிரடியால் தப்பிய மானம்.. குறைவான ஸ்கோர்

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் திணறடித்தனர். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நிலையில் உள்ள இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, சிஎஸ்கே வீரர்களின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 100 ரன்களைக் கூடத் தாண்டுமா என்ற சந்தேகத்தில் இருந்த டெல்லி அணியை, கடைசி நேரத்தில் சமீர் ரிஸ்வி தனது அதிரடியால் காப்பாற்றினார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் பதும் நிசாங்கா 19 ரன்களிலும், விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். சிஎஸ்கே அணியின் அகீல் ஹொசைன் தனது 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி டெல்லி பேட்ஸ்மேன்களைக் கட்டிப்போட்டார். நிதீஷ் ராணா 15 ரன்களிலும் மற்றும் கருண் நாயர் 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெல்லி அணி 10.6 ஓவர்களில் 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. நுார் அகமது தனது சுழலால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிடில் ஓவர்களில் டெல்லியின் பேட்டிங்கை காலி செய்தார்.

IPL 2026 CSK vs MI Bowlers Rattle Delhi Capitals in Crucial Match Sameer Rizvi Rescues DC s score

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் சமீர் ரிஸ்வி ஜோடி நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தது. ஸ்டப்ஸ் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். வெறும் 24 பந்துகளைச் சந்தித்த அவர், 4 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 40 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றார். கடைசி ஓவர்களில் அசுதோஷ் சர்மா 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எட்டியது.

சிஎஸ்கே தரப்பில் நுார் அகமது 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அன்ஷுல் காம்போஜ் 4 ஓவர்களில் 49 ரன்களை வாரி வழங்கினார்.

Story first published: Tuesday, May 5, 2026, 21:29 [IST]
Other articles published on May 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+