Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இனி உங்களை நம்பினால் வேலைக்கு ஆகாது.. பந்தை கையில் எடுத்த சிவம் துபே.. முதல் ஓவரிலே விக்கெட்

பெங்களூரு: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக உள்ள நிலையில் இனி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சிவம் துபே ஓவர் வீசி விக்கெட்டை வீழ்த்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த முறை மிகவும் மோசமாக செயல்பட்ட நிலையில் அதை அப்படியே தொடரும் வகையில் இம்முறையும் விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக பந்துவீச்சு சிஎஸ்கே அணியின் பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. பேட்டிங் பலமாக இருந்தாலும், பந்துவீச்சில் சிஎஸ்கே வீரர்கள் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

CSK vs RCB

இது கூட rcb அணி நிர்ணயிக்கும் இலக்கை சேஸிங் செய்துவிடலாம் என்பதுதான். ஏனென்றால் சிஎஸ்கே அணி எவ்வளவு இலக்கை நிர்ணயித்தாலும் தங்களுடைய பந்துவீச்சு மோசமாக இருப்பதால் அதனை rcb எளிதில் எட்டி விடும். இந்த நிலையில் ஆர் சி பி அணியில் பில் சால்ட் அதிரடியாக விளையாடி வந்தார். அவருடைய விக்கெட்டை யார் வீழ்த்தப் போகிறார் என்ற குழப்பத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் இருந்தனர்.

அப்போது திடீரென்று சிவம் தும்பி பந்தை வாங்கி வீசினார். ஆட்டத்தின் 11 ஆவது ஓவரில் சிவம் துபே வீசும்போது தனது நான்காவது பதிலே பில் சால்டின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். முதல் ஓவரில் சிவம் துபே வெறும் எட்டு ரன்களை தான் வழங்கினார். ஆனால் சிவம் துபேவால் அடுத்தது இதே போல் ஒரு பந்துவீச்சை செயல்படுத்த முடியவில்லை.

சிவம் துபே தனது இரண்டாவது ஓவரை எதிர்கொள்ளும்போது ரஜத் பட்டிதார் மற்றும் படிக்கல் ஆகியோர் அவருடைய பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்து 22 ரன்களை சேர்த்தனர். இதனால் 14வது ஓவரிலேயே ஆர்சிபி அணி இரண்டு விக்கெட் இழந்து 151 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ள நிலையில் மாற்று வீரராக இருப்பவர்கள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாதவர்களாக தான் உள்ளனர். இது சிஎஸ்கேவுக்கு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, April 5, 2026, 20:57 [IST]
Other articles published on Apr 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+