Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன? அடுத்த போட்டியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும்?

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் படுதோல்வியை தழுவி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த முறை புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் பிடித்த சிஎஸ்கே தற்போது புதிய வீரர்களை வைத்து களம் இறங்கியது.

ஆனால் தொடர் தொடங்குவதற்கு முன்பே சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது சிஎஸ்கே அணியின் பலத்தை வெகுவாக பாதித்தது. இந்த சூழலில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுக்க அதனை ராஜஸ்தான் அணி 12.1 ஓவரில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணியில் உர்வில் பட்டேல் என்ற அதிரடி வீரர் இருக்கின்றார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காமல், மேத்தீவ் ஷாட் என்ற ஆஸ்திரேலியா வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

நடுவரிசையில் உர்வில் பட்டேல் களமிறங்க இருந்தால் நிச்சயம் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். அது மட்டுமில்லாமல் டாஸ் இந்த போட்டியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட சிஎஸ்கே அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த சூழலில் முதல் மூன்று ஓவர்களில் பொறுமையாக விளையாடிவிட்டு அதன் பிறகு விக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு அதிரடி காட்டி இருக்க வேண்டும். ஆனால் சிஎஸ்கே அணி பவர் பிளேவிலே மூன்று விக்கெட்டுகள் இழந்ததால் அது மிகப் பெரிய மைனஸ் ஆக மாறியது. இது போன்ற ஆட்டங்களில் சாம்சன், ருதுராஜ் போன்ற வீரர்கள் கடைசிவரை நின்று இருக்க வேண்டும்.

அதுவும் நடைபெறவில்லை, சிஎஸ்கே அணி கொஞ்சம் பொறுப்பும் அதிரடியும் கலந்து விளையாடி இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் பந்துவீச்சு சிஎஸ்கே அணிக்கு சுத்தமாக எடுபடவில்லை. இது இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாகத்தான் பெரும்பான்மையான வீரர்கள் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு இம்முறை செல்வது கடினம் தான் என்று கணித்துள்ளனர்.

டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் பவுலிங் வீசும் வீரர்கள் அணியில் இல்லை. கலீல் அஹ்மத், அன்சூல் கம்போஜ் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள். எனினும் பெரிய இலக்கு இல்லை என்பதால் பவுலர்களால் தாக்கத்தை எதுவும் ஏற்படுத்த முடியவில்லை. அடுத்த போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் உர்வில் பட்டேல், அகில் உசேன் போன்ற வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும். இந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியும்.

Story first published: Monday, March 30, 2026, 23:59 [IST]
Other articles published on Mar 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+