For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2026: ஜடேஜா அணியை விட்டு சென்றால், சிஎஸ்கே இந்த 2 வீரர்களை தான் ஏலத்தில் வாங்கும்- அஸ்வின்

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு ஜடேஜா, ராஜஸ்தான் அணிக்கு சென்று விடுவார் என்றும் அந்த அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு வருவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு அணிகளும் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஜடேஜாவை சிஎஸ்கே அணி ராஜஸ்தானுக்கு அனுப்பி விட்டால் மினி ஏலத்தில் இரண்டு வீரர்களை வாங்க முயற்சி செய்யும் என்று கூறியுள்ளார்.

Ashwin on CSK

இது குறித்து பேசிய அவர், சி எஸ் கே அணி வரும் மினி ஏலத்தை பயன்படுத்தி அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும். ஷாம்க்ரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்று விட்டால், நிதிஷ் ராணா ஏலத்தில் வந்துவிடுவார். அப்போது சிஎஸ்கே அணி நிதீஷ் ரானா மற்றும் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை ஏலத்தில் எப்படியாவது எடுக்க முயற்சி செய்யும்.

ஒருவேளை சஞ்சு சாம்சனும் ருதுராஜ் கெய்க்வாடும், தொடக்க வீரர்களாக களமிறங்கினால், மூன்றாவது இடத்தில் விளையாட வெங்கடேஷ் ஐயர் அல்லது நிதிஷ்ரானாவை சிஎஸ்கே அணி பயன்படுத்தும். இதன் மூலம் நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் பிரவீஸ், ஐந்தாவது இடத்தில் சிவம் துபேவும் விளையாடுவார்கள். இந்த இடத்தில் ஆறாவது வீரராக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரன் கிரீனை சிஎஸ்கே வாங்கினால் அவர்களுடைய பேட்டிங் வரிசை மீண்டும் பலமாக மாறிவிடும்.

வெங்கடேஷ் ஐயர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு சிறந்த இன்னிங்ஸை விளையாடியிருக்கிறார் என்று நினைக்கின்றேன். சிவம் துபேவை போல் அவரும் அதிரடியாக ரன்களை சேர்ப்பார். அது மட்டுமில்லாமல் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷார்ட்களை ஆடுவார். நிதிஷ் ரானா பௌண்டரிகளை அபாரமாக அடிக்கக்கூடியவர். சிஎஸ்கே அணிக்கு இருவரும் வந்தால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 12, 2025, 11:36 [IST]
Other articles published on Nov 12, 2025
English summary
IPL 2026- CSK Will buy this 2 cricketers in auction says Ashwin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+