Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: என்ன நடந்தது என்றே புரியவில்லை..இந்த போட்டியையே மறந்திடனும்..டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல்

டெல்லி: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு ஆட்டமாக மாறிவிட்டது. டாஸ் வென்ற ஆர் சி பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய புவனேஸ்வர் குமார் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் அபாரமாக பந்து வீசி டெல்லி அணியை சிதறடித்தனர்.

டெல்லி அணி 8 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபிஷேக் போரெல் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் நிதானமாக விளையாடினர்.

எனினும் டெல்லி அணி 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, இந்த இலக்கை ஆர்சிபி அணி 6 புள்ளி மூன்று ஓவர்களில் எட்டியது. இந்த படுதோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல், உண்மையிலே என்ன நடந்தது என்று எனக்கு புரியவில்லை.

ஆனால் கிரிக்கெட்டில் எப்போதுமே நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டு வர வேண்டும். தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்று என்ன நடந்தது என்பதை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு செல்ல வேண்டும். கிரிக்கெட்டில் எப்படி நடந்தால் நன்றாக இருக்கும். அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லலாம்.

ஆனால் அது எதுவுமே பலன் தராது. கடந்த போட்டியில் நாங்கள் கேட்ச்சை பிடித்திருந்தால், வெற்றி பெற்றிருப்போம்.ஆனால் அப்படி நடக்கவில்லை. எனவே சரியான விஷயத்தை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்ய வேண்டும். பயிற்சியில் செய்வதை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் என்று தான் நான் வீரர்களிடம் கூறுகின்றேன்.

ஐபிஎல் என்பது ஒரு கடுமையான தொடர் ஒரு நாள் கூட நமக்கு மிகவும் எளிதாக வந்து விடாது. ஒவ்வொரு முறையும் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும். தற்போது நடந்து முடிந்ததை நினைத்து கவலைப்படாமல், நமக்கு முன்பு என்ன இருக்கிறது என்பதை பார்த்து கவனிக்க வேண்டும். இந்த போட்டியில் இருந்து நாம் நகர்ந்து செல்ல வேண்டும். எதிர்மறையாக இருந்தால் நிச்சயம் போட்டிகளில் நாம் தோல்வியை தழுவுவோம். அதுவே நேர்மறையான எண்ணத்துடன் இருந்தால் நம்மால் சிறப்பாக ஆட்டத்தில் செயல்பட முடியும்.

எனவே இந்த போட்டியை மறந்து விட்டு முன்னோக்கி செல்ல வேண்டும். இதை தான் எனது வீரர்களிடம் நான் கூறுகின்றேன். ஒரு மோசமான போட்டியால் நமது திறமை கேள்விக்குறியாகி விடாது. எனவே பாசிட்டிவ் ஆக இருங்கள். கடந்த ஆறு, ஏழு போட்டிகளாக நாம் என்ன செய்தோமோ, அதையே மீண்டும் செய்யுங்கள். நல்ல மனநிலையுடன் இருங்கள். ஆர் சி பி அணியின் பந்துவீச்சை நாம் பாராட்ட வேண்டும்.

அவர்களது அணியின் புவனேஸ்வர் குமார், ஹேசல்வுட் ஒன்று போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். எங்கள் அணியில் தொடக்க வீரர்களும் மூன்றாவது வீரரும் டாப் பாடல்கள் கொஞ்சம் நன்றாக விளையாடு இருந்தால், இந்த ஆட்டத்தில் முடிவே வேறு மாதிரியாக கூட இருந்திருக்கும் எனினும் ஆர்சிபி அணியின் பவுலர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

Story first published: Monday, April 27, 2026, 23:53 [IST]
Other articles published on Apr 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+