Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: “மில்லர் ரன் ஓடாத போதே ஜெயித்து விடுவோம்னு தெரிஞ்சு போச்சு”.. சுப்மன் கில் மகிழ்ச்சி

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான திக் திக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் டெல்லி வீரர் டேவிட் மில்லர் ரன் ஓட மறுத்ததே குஜராத் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 210 ரன்கள் குவித்தது.

சுப்மன் கில் 70, வாஷிங்டன் சுந்தர் 55, ஜோஸ் பட்லர் 52 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 211 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி அணி 209 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து மயிரிழையில் தோல்வியடைந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய ஆட்டத்தின் பரபரப்பான கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

IPL 2026 DC vs GT Shubman Gill speech after Gujarat Titans Secure Thrilling 1-Run Victory Over Delhi Capitals

ஆனால் 5வது பந்தில் டேவிட் மில்லர் சிங்கிள் ஓட மறுத்துவிட்டார். மறுபுறம் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் துல்லியமாக பந்தை எறிந்து குல்தீப் யாதவை ரன் அவுட் செய்தார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த வெற்றி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "நாங்கள் விளையாடிய 3 போட்டிகளுமே கடைசி ஓவர் வரை சென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. 5வது பந்தில் மில்லர் ரன் ஓட மறுத்தபோதே, இந்த போட்டியில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது."

"கடைசி பந்தில் யார்க்கர் வீசுவதா அல்லது வேகம் குறைந்த பந்தை வீசுவதா என பிரசித் கிருஷ்ணாவிடம் ஆலோசித்தேன். ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு வேகம் குறைந்த பந்தை வீசினால் அதில் பவுண்டரி அடிப்பது கடினம் என முடிவெடுத்து அதையே செயல்படுத்தினோம்."

"இந்த ஆடுகளத்தில் 210 ரன்கள் என்பது 10 முதல் 15 ரன்கள் கூடுதலான ஸ்கோர் தான். டெத் ஓவர்களில் பவுண்டரி அடிப்பது எளிதாக இல்லை. நாம் சரியாக பந்துவீசினால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். பீல்டிங்கில் ஒவ்வொருவரின் சிறப்பான முயற்சியும் இந்த 1 ரன் வெற்றிக்கு உதவியது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளேன், இப்போது எனக்கு நன்றாக தூங்க வேண்டும்" என தெரிவித்தார் சுப்மன் கில்.

Story first published: Thursday, April 9, 2026, 7:15 [IST]
Other articles published on Apr 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+