For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சமீர் எங்களுக்கு வாய்ப்பே கொடுக்கலை".. மும்பை இந்தியன்ஸ்-ஐ வீழ்த்திய ரிஸ்வி.. சூர்யகுமார் வருத்தம்

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியின் 22 வயது இளம் வீரர் சமீர் ரிஸ்வி 90 ரன்கள் குவித்து மும்பை அணியின் வெற்றி வாய்ப்பைப் பறித்தார். இதை அடுத்து சூர்யகுமார் யாதவ் சமீர் ரிஸ்வியை புகழ்ந்து தள்ளினார். மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு சமீர் ரிஸ்வி தான் காரணம் என கூறினார்.

இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல்நலக்குறைவு காரணமாக விளையாடாததால், சூர்யகுமார் யாதவ் கேப்டனாகப் பொறுப்பேற்றார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் குவித்து அசத்தினார். ரோகித் சர்மாவுடன் இணைந்து அவர் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருப்பினும், 16 மற்றும் 18-வது ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகள் விழுந்ததால் மும்பை அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

IPL 2026 DC vs MI Suryakumar Yadav praises Sameer Rizvi and says Mumbai Indians need to start from the beginning

163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேஎல் ராகுல், நிதீஷ் ராணா போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் இளம் வீரர் சமீர் ரிஸ்வி களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். மிட்செல் சான்ட்னர், கோர்பின் போஷ் மற்றும் மயங்க் மார்கண்டே ஆகியோரின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 90 ரன்கள் குவித்தார். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சை மிகவும் நிதானமாக எதிர்கொண்டு, மற்ற பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவரது வியூகம் டெல்லிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

தோல்விக்கு பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், "சில நாட்களில் நாம் எடுக்கும் முயற்சிகள் பலிக்காமல் போகலாம். நாங்கள் மீண்டும் முதலில் இருந்து திட்டமிட்டு அடுத்த போட்டியில் பலமாகத் திரும்புவோம். சமீர் ரிஸ்வி விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. 7 ரன்களுக்கு 2 விக்கெட் விழுந்த நிலையில் களமிறங்கி அவர் ஆடிய விதம் எங்களுக்கு எந்த இடத்திலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். 180 முதல் 185 ரன்கள் எடுத்திருந்தால் அது சரியான ஸ்கோராக இருந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.

CSK vs RCB: இந்த ஒரு மேட்ச் ஜெயிச்சா பழசை மறந்துறலாம்.. சிஎஸ்கேவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!CSK vs RCB: இந்த ஒரு மேட்ச் ஜெயிச்சா பழசை மறந்துறலாம்.. சிஎஸ்கேவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

டெல்லி அணி 9 பந்துகள் மீதமிருக்கையிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் ஏப்ரல் 7-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இளம் வீரர் சமீர் ரிஸ்வியின் இந்த அதிரடி ஆட்டம் டெல்லி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

IPL 2026: புள்ளிப்பட்டியலில் எந்த அணி முதலிடம்? சிஎஸ்கே இடம் என்ன?.. ஆரஞ்சு, ஊதா தொப்பி பட்டியல்IPL 2026: புள்ளிப்பட்டியலில் எந்த அணி முதலிடம்? சிஎஸ்கே இடம் என்ன?.. ஆரஞ்சு, ஊதா தொப்பி பட்டியல்

Story first published: Sunday, April 5, 2026, 7:05 [IST]
Other articles published on Apr 5, 2026
English summary
IPL 2026 DC vs MI: Suryakumar Yadav praises Sameer Rizvi and says Mumbai Indians need to start from the beginning. Sameer Rizvi steered Delhi Capitals to a dominant win against Mumbai Indians at the Arun Jaitley Stadium.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+