Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டியில் பயங்கரம்.. மைதானத்திற்கு நடுவே வந்த ஆம்புலன்ஸ்.. அசைவின்றி கிடந்த லுங்கி நிகிடி

டெல்லி: ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி ஃபில்டிங் செய்யும் போது தலையில் மோசமான காயம் ஏற்பட்டது. கேட்ச் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட இந்த விபத்து, மைதானத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியது. உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஷ் ஆர்யா, அக்ஸர் படேல் வீசிய மூன்றாவது ஓவரில் மெதுவான பந்தை மிட்-ஆஃப் திசையில் அடித்தார். பந்தை பின்வாங்கிக் கொண்டிருந்த என்கிடி, அதனைப் பிடிக்க கையை நீட்டினார். ஆனால், பந்தை எட்டத் தவறிய அவர், பெலன்ஸ் இழந்து தடுமாறி, முதலில் முதுகில் தரையில் விழுந்து பின்னர் தலையில் மோதினார்.

சில கணங்கள் அசைவற்று கிடந்ததால் வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், ஆறுதல் அளிக்கும் விதமாக, மருத்துவக் குழுவினர் களத்தில் அவருக்கு சிகிச்சை அளித்தபோது, அவர் சுயநினைவுடன் காணப்பட்டார். இதனையடுத்து மைதானத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் வந்தது. ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவர் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மாக்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சக தென்னாப்பிரிக்க வீரர்கள் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.

லுங்கி என்கிடிக்கு பதிலாக துஷ்மந்த சமீரா மாற்று வீரரைக களமிறக்கப்பட்டார். இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக என்கிடி சிறப்பாகப் பங்காற்றி வந்தார். ஆறு போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அணியின் பந்துவீச்சுப் பட்டியலில் முன்னணியில் இருந்தார். அவரது திடீர் காயம் அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தனது ஐபிஎல் வாழ்க்கையில், என்கிடி சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக 23 போட்டிகளில் விளையாடி, 8.57 சிக்கன விகிதத்தில் 36 விக்கெட்டுகளை எடுத்தார். மினி ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை ₹2 கோடிக்கு வாங்கியது. மறைமுகமான மெதுவான பந்துவீச்சுக்கு அவர் பெயர் பெற்றவர்.

போட்டியில் முன்னதாக, முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றின் சாதனையைப் படைத்தது. கே.எல். ராகுல் 67 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் விளாசி, அணியின் ஸ்கோரை 264/2 ஆக உயர்த்தினார். இது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ராகுல், நிதிஷ் ரானாவுடன் (44 பந்துகளில் 91) இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது, போட்டியின் வரலாற்றிலேயே இரண்டாவது பெரிய பார்ட்னர்ஷிப்பாகும்

Story first published: Saturday, April 25, 2026, 19:02 [IST]
Other articles published on Apr 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+