Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கேக்கு சாம்சன் வந்தால், தோனி இம்பேக்ட் வீரராக தான் வருவார்.. பத்ரிநாத் சொன்ன பதில்

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, வெறும் இம்பேக்ட் வீரராக மட்டும்தான் களமிறங்குவார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. தோனிக்கு உடல் தகுதி மற்றும் வயதாகி வருவதால் 20 ஓவர் களத்தில் நின்று விக்கெட் கீப்பிங் பணியை செய்ய முடியாது.

இதனால் அதிரடி வீரர் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி தேர்வு செய்து விட்டு தோனி வெறும் பேட்டிங் செய்ய மட்டும் களத்திற்கு வரலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த செய்திக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் மறுப்பு வெளியிட்டு இருக்கிறார்.

IPL 2026 MS Dhoni 2026

இது குறித்து பேசிய அவர், தோனி கண்டிப்பாக இம்பேக்ட் வீரராக களத்திற்கு வர மாட்டார். அது எனக்கு நன்றாக தெரியும். தோனி விளையாடினால் அணியின் விக்கெட் கீப்பராக மட்டும் தான் இருப்பார். அதற்கு காரணம் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போது தோனி களத்தில் விக்கெட் கீப்பராக நிற்க வேண்டும்.

இம்பேக்ட் வீரராக களமிறங்க வேண்டுமென்றால் கடைசி இரண்டு ஓவரில் தான் பேட்டிங் செய்ய வரவேண்டும். அப்படி இருக்கும் போது தோனி இம்பேக்ட் வீரராக வந்து களமிறங்குவாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி நடக்காது என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் தோனியையும் சிஎஸ்கேவியும் எனக்கு நன்றாக தெரியும்.

தோனி முழு சீசனும் விளையாடாமல் கூட இருப்பார். ஆனால் விக்கெட் கீப்பராக களத்திற்கு வராமல் இருக்க மாட்டார். இதன் மூலம் தோனி பில்டிங் செய்யும் போது களத்தை விட்டு வெளியேறி சஞ்சு சான்சனை விக்கெட் கீப்பராக செயல்பட வைப்பார் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார்.

இல்லையென்றால் என்னால் முடியவில்லை . நான் ஐபிஎல் இல் இருந்து வெளியேறுகிறேன் என்று சொல்லிவிட்டு தோனி கிளம்பி விடுவார். சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கேப்டனாக இருந்தாலும் சில கட்டுப்பாடு தோனி கையில் தான் இருக்கின்றது. ஏனென்றால் அதுதான் அவருடைய மதிப்பு என பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, November 12, 2025, 18:16 [IST]
Other articles published on Nov 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+