Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 15 வயது சிறுவன் வைபவ் அதிரடியால் தொடரிலிருந்து வெளியேறிய சன்ரைசர்ஸ்..ராஜஸ்தான் முன்னேற்றம்

சந்திகார்: ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்று குவாலிபையர் 2-க்கு முன்னேறியுள்ளது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப் போட்டி வாய்ப்பிற்கான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும்.

சந்திகாரில் நடைபெற்ற இப்போட்டியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இந்த சீசனின் பயணம் முடிவடைந்தாலும், அவர்களும் ஒரு வலுவான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

ஒரு அப்பர்-கட் ஷாட்டை அடிக்க முயன்றபோது அவர் ஆட்டமிழந்தது, சதம் அடிக்கும் அவரது கனவை சற்றே தாமதப்படுத்தியது.சதம் தவறவிட்ட போதிலும், வைபவ் சூர்யவன்ஷி மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்தார். ஐபிஎல் 2026 சீசனில் மொத்தம் 65 சிக்ஸர்களை விளாசி, கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடித்தார்.

Vaibhav sooryavanshi: ஒரே போட்டியில் உடைத்த ஒட்டுமொத்த சாதனைகள் விவரம்.. பாட் கம்மின்ஸ் படை கதறல்

Vaibhav sooryavanshi: ஒரே போட்டியில் உடைத்த ஒட்டுமொத்த சாதனைகள் விவரம்.. பாட் கம்மின்ஸ் படை கதறல்

கெய்ல் 2012ஆம் ஆண்டு 59 சிக்ஸர்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே 2025ல் 35 பந்துகளிலும், இந்த சீசனில் 36 பந்துகளிலும் சதம் அடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் கடைசி விக்கெட்டாக சிவங் குமார் ஆட்டமிழந்தார்.

IPL 2026: ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி.. முதலிடம் பிடித்து அபாரம்

IPL 2026: ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி.. முதலிடம் பிடித்து அபாரம்

சுஷாந்த் மிஸ்ராவின் பந்துவீச்சில், வைபவ் சூர்யவன்ஷியே லாவகமாக கேட்ச் பிடித்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.ஹைதராபாத் அணியின் சலீல் அரோரா 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்கள் எடுத்தார். உலகின் முதல் நிலை வீரரான அபிஷேக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இசான் கிஷன் 11 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தாலும், அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

Story first published: Wednesday, May 27, 2026, 23:38 [IST]
Other articles published on May 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+