IPL 2026: பைனலில் கில்லுக்கு 'பிரச்சனையே புவனேஸ்வர்தான்.. வெற்றியை தீர்மானிக்கும் 5 முக்கிய மோதல்கள்
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற உள்ள 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளில் உள்ள முக்கிய வீரர்களின் முந்தைய மோதல் குறித்த விவரங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே 3 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. தற்போது இறுதிப் போட்டியில் 4-வது மற்றும் கடைசி முறையாக மோத உள்ளன. இதில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய 5 முக்கிய மோதல்கள் இதோ:
கோலி - ரபாடா
விராட் கோலி மற்றும் ககிசோ ரபாடா இடையிலான மோதல் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அனல் பறக்கப் போகிறது. பெங்களூரு அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக கோலி இருக்கும் நிலையில், குஜராத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரபாடா தற்போது 'பர்பிள் கேப்' வைத்துள்ளார். ரபாடாவின் வேகத்தைச் சமாளித்து கோலி நிலைத்து நின்றால், பெங்களூரு அணிக்கு அது மிகப்பெரிய பலமாக அமையும். மாறாக ரபாடா தொடக்கத்திலேயே கோலியை வீழ்த்தினால் அது குஜராத் அணிக்குச் சாதகமாக முடியும்.

கில் - புவனேஸ்வர் குமார்
குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவது பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தான். ஐபிஎல் வரலாற்றில் புவனேஸ்வர் வீசிய 79 பந்துகளில் கில் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 6 முறை கில்லின் விக்கெட்டை புவனேஸ்வர் வீழ்த்தியுள்ளார். புவனேஸ்வருக்கு எதிராகக் கில்லின் சராசரி வெறும் 13.33 மட்டுமே. இந்தப் புள்ளிவிவரம் குஜராத் அணிக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷித் கான் - ஆர்சிபி மிடில் ஆர்டர்
மிடில் ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷித் கான் பந்துவீச வரும்போது ஆர்சிபி-யின் இரு வீரர்களிடம் இருந்து அவருக்குக் கடும் சவால் காத்திருக்கிறது. ரஜத் படிதார் ரஷித் கானின் பந்துவீச்சை 212.5 'ஸ்டிரைக் ரேட்' வேகத்தில் விளாசுகிறார். ஒருமுறை கூட அவரிடம் விக்கெட்டை இழந்ததில்லை. ஆனால், தேவ்தத் படிக்கல் ரஷித் கானின் சுழலில் சிக்கி இதுவரை 5 முறை ஆட்டமிழந்துள்ளார். ரஷித் கான் இந்த இருவரில் யாரை வீழ்த்துவார் என்பது முக்கியமானது.
ஹேசில்வுட் - குஜராத் டாப் ஆர்டர்
பெங்களூருவின் ஹேசில்வுட், குஜராத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லரை வீழ்த்தத் தயாராக உள்ளார். சாய் சுதர்சன் ஹேசில்வுட்டிற்கு எதிராகச் சற்று நிதானமாகவே (133.33 ஸ்டிரைக் ரேட்) ஆடுகிறார். ஆனால், பட்லர் ஹேசில்வுட் பந்துவீச்சை 178.72 ஸ்டிரைக் ரேட் வேகத்தில் சிதறடிக்கக் கூடியவர். பட்லரை ஆரம்பத்திலேயே வீழ்த்துவது ஹேசில்வுட்டின் முக்கிய வேலையாக இருக்கும்.
இந்தத் தனிப்பட்ட மோதல்களில் எந்த அணி வீரர்கள் அதிக வெற்றிகளைப் பெறுகிறார்களோ, அந்த அணிக்கே 2026 ஐபிஎல் மகுடம் சூடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆட்டத்தின் போக்கை மாற்றப்போகும் அந்த ஒரு விக்கெட் அல்லது அந்த ஒரு ஓவர் யாருக்குச் சாதகமாக அமையப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
